Vikraman: இந்தப் படத்துக்கு ஏன்டா 50 கட்ஸ்? அப்பவே சென்சார் செய்த சம்பவம்.. புலம்பிய விக்ரமன்

ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதிலிருந்து தமிழ் திரைப்படங்கள் மத்தியில் சென்சார் குறித்து ஒரு பெரிய பீதியே கிளம்பி இருக்கிறது. இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் சென்சாருக்கு சென்று வந்திருக்கின்றன. ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தை சென்சார் போர்டு வச்சு செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவு ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய முதல் படத்துக்கு சுமார் 50 கட்ஸை சென்சார் நிர்வாகம் கொடுத்ததாக இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளார். அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் புதுவசந்தம். அந்தப் படத்திற்கு 50 கட்ஸ்கள் கொடுக்கச் சொன்னதாக விக்ரமன் தெரிவித்திருக்கிறார். அதாவது அந்த படம் முழுக்க முழுக்க சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அப்போது மத்தியில் விபி சிங் ஆட்சி அமைத்துக் கொண்டிருந்தாராம். இந்த படம் சென்னையில் படமாக்கும் பொழுது சுவர்களில் ராஜீவ் காந்திக்கு ஓட்டு போடுங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த காட்சி படத்தில் அவ்வப்போது வந்து போனதாக தெரிகிறது. அதை உடனே கட் செய்ய வேண்டும் என சென்சார் நிர்வாகம் தெரிவிக்க அப்படி ஒரு 50 கட்ஸ்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக விக்ரமன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல ஒரு சில இடங்களில் வசனத்தையும் கட் செய்ய வேண்டும் என சென்சார் போர்டு அறிவுறுத்தியதாம். புது வசந்தம் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் சித்தாரா கேரக்டர் ஒரு நான்கு இளைஞர்களுடன் பயணம் செய்வது மாதிரி இருக்கும். அதை பாஞ்சாலியுடன் ஒப்பிட்டு சில பெண்கள் சித்தாராவை தவறாக தெருவில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அந்த பாஞ்சாலி என்ற வார்த்தைக்கு சென்சார் போர்டு அந்த வசனத்தையே தூக்க வேண்டும் என சொல்லியிருந்ததாம். இந்த மாதிரி அன்றைய காலகட்டத்தில் இருந்து தணிக்கை வாரியத்தால் எத்தனையோ பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது என விக்ரமன் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

9 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

17 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

18 hours ago