Connect with us

நாடக மேடையில் சரித்திரம் படைத்த சினிமா வில்லன் நடிகர்…எம்ஜிஆர் சிவாஜிக்கு இனிய நண்பன்..!

Cinema History

நாடக மேடையில் சரித்திரம் படைத்த சினிமா வில்லன் நடிகர்…எம்ஜிஆர் சிவாஜிக்கு இனிய நண்பன்..!

பழம்பெரும் வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் பற்றி சுவராஸ்யமான தகவலகளைப் பார்ப்போம்.

தாய் தந்தையிடம் பக்தி, பெரியவர்களிடம் பணிவு, ஒழுக்கமான சிந்தனை, சாதிக்க வேண்டும் என்ற கனவு,
கனவை நனவாக்க தகுதி வளர்த்தல், நல்ல பழக்க வழக்கம், கொஞ்சம் பக்தி என்று எடுத்துக் கொண்டால் ஒரு உண்மை புரிய வரும்.

ஆம்…இதுதான் சாதனை மனிதனின் ரகசியம்..! இதற்கு மிகச் சிறந் ஒரு உதாரணம் நடிகர் ஆர். எஸ் மனோகர். இவரை வில்லனாகத் தான் நமக்குத் தெரியும். இவருக்கு இன்னோரு முகமும் உண்டு. அதைப் பற்றிப் பார்க்கலாம்.

லட்சுமி நரசிம்மன் என்ற அவரது பெயர் மனோகரா நாடகத்தில் நடித்ததால் மனோகர் ஆனது.

“மிருச்சடிக்கா” எனும் சமஸ்கிருத நாடகத்தில் நடிக்க வேண்டிய மாணவனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த டிராமாவை நடிக்கும் தில் யாருக்கு உண்டு? எனக் கேட்க, கையைத் தூக்கினார் மனோகர். உனக்கு சமஸ்கிருதம் தெரியுமா? தெரியும் ஐயா என்றார்.

நாடக நடிகரானார். பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தார் மனோகர். இவரது முதல் படம் ராஜம்மாள். கதாநாயகன் வேடம். படத்தில் வில்லனாக வீணை பாலசந்தர் நடித்தார்.

அடுத்தது 1956ல் நல்ல வீடு படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்தார். வில்லன் வேடத்தில் மனோகர் நடித்தார்.
இதற்கு முன் 1952 ல் தாயுள்ளம் படத்தில் நடித்தார். இதில் ஜெமினிதான் வில்லன்..!

மிஸ்டர் மனோகர், ஹீரோவாக நடித்த நீங்கள் வில்லனாக நடிக்க ஆரம்பித்த போது வருத்தப்படவில்லையா? என ஒருமுறை நிருபர் கேட்க, இல்லவே இல்லை. வில்லனாக நடிக்க போட்டியில்லை. என்றார் கூலாக.

1950 லேயே வி.சி.கோபாலரத்தினம் நாடகசபாவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் மனோகர். அங்கு தான் நடிப்பு மற்றும் உச்சரிக்கும் திறனை வளர்த்துக்கொண்டார். தோட்டக்கார விஸ்வநாதனின் நட்பு கிடைத்தது. அவருடைய நாடகத்தில் பங்கேற்று தன்னை மேன்மை படுத்திக்கொண்டார்.

14 நவம்பர் 1954 அன்று தேசிய தலைவர் நேருவின் பிறந்தநாள். அன்று தான் ஆரம்பிக்கப்பட்டது நேஷனல் தியேட்டர். முதலில் சமூக நாடகங்கள், பிறகு புராண நாடகங்கள் என்று போட்டார்கள்.

நாடகம் தயாரிக்க நான் மானசீக குருவாக கருதுவது நவாப் ராஜமாணிக்கம் அவர்களை தான் என்கிறார் மனோகர். சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த நீங்கள் எப்படி வில்லன் ஆனீர்கள்? என்ற கேள்விக்கு இவ்வாறு சொல்கிறார்.

சேலத்தில் இலங்கேஸ்வரன் நாடகம் நடந்த போது, அதைக் காண வந்திருந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம். என் நடிப்பு அவருக்கு பிடித்து விட்டது. அப்போது வந்து விழுந்தது தான் வண்ணக்கிளி.

டி.ஆர். சுந்தரம் ஐயாவிடமிருந்து நேரம் தவறாமை, டிஸிப்ளின், திட்டமிடல் போன்ற நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். இவற்றை தன் நாடக தயாரிப்பில் கடை பிடித்தார் மனோகர்.

RS.Manohar

கதாசிரியர் துறையூர் மூர்த்தி ஒரு புராண நாடகத்தை மனோகரிடம் கொடுத்தார். புராண நாடகம் நடத்த நம்மைவிட சிறந்த ஜாம்பவான்கள் இருக்கிறார்களே..என்றார். இது வேற ரகம். என்னங்க பெயர்? என்று மனோகர் கேட்டார். இலங்கேஸ்வரன் என்றார்.

பெயரைக் கேட்டு ஒரம் கட்டினார் மனோகரன். துறையூரார் விடாமல் துரத்தினார். இராவணனை ஹீரோவாக வைத்து நாடகம் நடத்தினால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றார் மனோகர்.

சும்மா மேக்கப் டெஸ்ட் போடுங்களேன் என்றார். இவர்தான் ஆர்.நாகராஜன். மனோகரின் மேடை நிர்வாகி. மேக்கப், உடை, செட்டிங்ஸ், தந்திரக் காட்சிகள், பணியாளர்களின் பொறுப்பாளர் என ஒரு நாடகத்தை நடத்த 30 பேரை சரியாக வேலை வாங்குவார். சுமார் 5000 நாடகங்களை மேடையேறிய வெற்றியாளர் இவர்.

மனோகரின் திறமையை மதித்து, நன்கு ஆலோசித்து துணிந்து இராவணனை மேடையேற்றினார். ராஜாஜியிடமிருந்து எதிர்ப்பு வந்தது. எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை. மனோகர் தளர்ந்து விடவில்லை.
நேரே காஞ்சிமடத்திற்கு போனார். என்ன இப்ப..? இராவணன் மகள் சீதை என்று சொல்கிறீர்கள். ராமபிரானை எங்கும் அவமதிக்கவில்லை. போய் வேலையைத் துவங்குங்கள். மகானின் ஆசீர்வாதம் பலித்தது.

இலங்கையிலிருந்து இலங்கேஸ்வரனுக்கு ஆஃபர் வந்தது. இதன் பிறகு சூரபத்மன், நரகாசுரன், சிசுபாலன், மாலிக்காஃபூர் என தொடர்ந்தது. மனோகர் நாடகத்தில் என்னதான் சிறப்பு என்று கேட்கலாம்.

மற்ற மேடைகளின் அகலம் 22 அடி இருக்கும். மனோகரது மேடை நாடகத்தில் 30 அடியில் டிராமாஸ்கோப் முறையில் பிரம்மாண்டமாக நடத்துவார். அவர் தான் மனோகர். மற்ற நாடகத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் வரும் இடைவெளியில் படுதா போட்டுவிட்டு அபஸ்வரத்தில் ஆர்மோனியம் ஒலிக்கும்.

மனோகர் நாடகத்தில் ஒரு விநாடியில் காட்சி மாறிவிடும். ஒரு வேளை தாமதமாகிற மாதிரி இருந்தால் காமெடியை நுழைத்து விடுவார். அம்பு பறந்து நாகமாக மாறும். யானை வந்து மாலையிடும். இதெல்லாம் சினிமாவில் செய்வது ரொம்பவே எளிமையான விஷயம். ஆனால் அதை எல்லாம் நாடகத்தில் சாத்தியமாக்கி மக்களை ரசிக்க வைத்தார் மனோகர்.

எம்ஜிஆர், சிவாஜிக்கு நல்ல நண்பனாக இருந்தார் மனோகர். அதே போல ஜெயலலிதா மதிக்கும் நடிகர்களில் மனோகரும் ஒருவர். இதனால் தமிழ் நாட்டின் இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியில் அமர வைத்தார்.

RS Manohar with wife Seethalakshmi

நாடக மேடையை நமக்கு அடிமையாக நினைக்கக்கூடாது. நாம் தான் அதற்கு அடிமை. நாடகத்தில் நல்ல மெசேஜ் சொல்வதில் தவறில்லை. இளைஞர்கள் கர்லா கட்டையை சுற்றி உடம்பை மேம்படுத்தும் போது தகுந்த ஆலோசனையுடன் செய்ய வேண்டும். மனோகர் மூட்டு வலியால் அவதிப்பட்ட போது வந்த கருத்துகள் தான் இவை.

மனோகரின் மனைவி சீதாலெட்சுமி கணக்கு பாடத்தில் பட்டதாரி. அவரது நிதி வரவை சிறப்பாய் நிர்வகித்து வந்தார்.
மனோகர் அந்த காலத்து ஜெ.ஜெ. டிவிக்காக பிரமாண்ட சீரியலை இயக்கிக்கொண்டிருந்தார். அது ஒளிபரப்பாகவேயில்லை. அந்த வருத்தம் அவருக்கு எப்போதும் உண்டு.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top