பெரிய நடிகரின் பட வாய்ப்பை இழக்கவிருக்கும் ஹெச்.வினோத் -  எல்லாத்துக்கும் கமல்தான் காரணமாம்…

by Rajkumar |   ( Updated:2023-05-17 02:51:03  )
பெரிய நடிகரின் பட வாய்ப்பை இழக்கவிருக்கும் ஹெச்.வினோத் -  எல்லாத்துக்கும் கமல்தான் காரணமாம்…
X

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். வெகு நாட்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்படம் மீண்டும் சினிமாவிற்கு வருவதற்கு உதவியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனே தயாரித்தார். அதன் மூலம் பெரும் லாபத்தை பெற்றார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து பல படங்களை தயாரிக்க துவங்கியுள்ளார்.

H.Vinoth

H.Vinoth

பல படங்களில் நடிக்கவும் இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம், வெற்றிமாறன், ஹெச்.வினோத் இவர்கள் அனைவரிடமும் கமல்ஹாசன் படம் இயக்குவதற்காக கேட்டுள்ளார். இந்த நிலையில் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் வெற்றி அடைந்தது. அதற்கு பிறகு இன்னமும் எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் ஹெச். வினோத்.

ஏனெனில் இந்தியன் 2விற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து இயக்குனர் ஹெச்.வினோத் படம் எடுக்க இருப்பதாக பேச்சுகள் இருந்தது. ஆனால் நாட்கள் செல்கிறதே தவிர இன்னமும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் படம் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் ஹெச்.வினோத்.

ஆனால் கமல் இன்னமும் எந்த முடிவும் சொல்லாத காரணத்தால் ஹெச் வினோத்தும் தனுஷிற்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். அதே போல கமல்ஹாசனும் ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இருவரில் யாரை வைத்து படம் நடிக்க போகிறார் என்பதும் குழப்பத்தில் உள்ளது.

இந்த குழப்பங்களில் தற்சமயம் இருக்கும் பட வாய்ப்பையும் இழக்கும் ஆபத்தில் உள்ளார் ஹெச்.வினோத்.

இதையும் படிங்க: வடிவேலு என்ன ஆகப் போறாருனு தெரியல – ஒளியேற்றி வைத்த விவேக் இன்னைக்கு இல்ல.. கொட்டித் தீர்த்த நடிகர்

Next Story