நான் சொன்னதுதான் விருமாண்டி..கமல் எடுத்துட்டார்...இயக்குனர் ஆதங்கம்....

by Manikandan |   ( Updated:2022-06-08 11:07:36  )
நான் சொன்னதுதான் விருமாண்டி..கமல் எடுத்துட்டார்...இயக்குனர் ஆதங்கம்....
X

கமல்ஹாசன் , ஹே ராம் படத்திற்கு பிறகுஅவரே எழுதி, தயாரித்து இயக்கிய திரைப்படம் விருமாண்டி. ஹே ராம் எனும் ஏ கிளாஸ் படத்திற்கு பிறகு ஓர் பக்கா கிராமத்து கதை செய்ய வேண்டும் என கமல் நினைத்திருந்தாராம் . அப்படி உருவானது தான் விருமாண்டி.

இந்த கதை உருவான விதம் பற்றி இயக்குனர் ராசி அழகப்பன் அண்மையில் ஒரு நேர்காணலில் பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, இவர் கமலை இயக்குவதற்காக அல்ல, கமல் தயாரிப்பில் ஒரு கதை கூற சென்றாராம்.

சிறிய கிராமத்து படம் ஒன்றின் சிறு சிறு காட்சிகள் மட்டும் கூறினாராம். அதனை 2,3 நாட்கள் போய் கூறினாராம். உடனே இதே போல நான் ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளேன். என கமல் கூறிவிட்டாராம். உடனே இந்த படம் நமக்கு கிடைக்காது அதனால் கிளம்பிவிடலாம் என அந்த இயக்குனர் நினைக்க,

உடனே, நீங்கள் சண்டியர் (விருமாண்டி ) கதையை முழுதாக எழுதும் வரையில் இருந்து பணியாற்ற வேண்டும் என கூறவே, கமல் பேச்சை மறுக்காமல் இருந்துள்ளார் ராசி அழகப்பன். அதற்காக கமலிடம் சொல்லாமல் ஜல்லிக்கட்டு காட்சிகளை படம்பிடித்து படத்தின் ஷூட்டிங் களத்தை காண்பித்ததே இவர்தானாம்.

இதையும் படியுங்களேன் - நீங்க வந்தா தேவர் மகன்.! இல்லனா வேணாம்.! 30 வருடத்திற்கு முன் கமல் எடுத்த அதிரடி முடிவு.!

அதில் தான் ஒருவர் கரண்ட் கம்பம் மீது ஏறி ஜல்லிக்கட்டு பார்ப்பதை படம்பிடித்து காண்பித்தாராம். இப்படி கதைக்களம், திரைக்கதை எல்லாம் முடிந்த பின்னர் ஷூட்டிங் கிளம்ப தயாரான நேரம், எனக்கு சின்ன மனசு சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. உடனே, அதில் இருந்து விலகிவிட்டாராம்.

இது பற்றி கமலிடம் கூறினாராம். நான் கிளம்புகிறேன் என்று மட்டும் கூறுகிறேன் அவரும் சரி என கூறினார். அதன் பிறகு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கமலை நேரில் சந்தித்தேன். என விருமாண்டி அனுபவங்களை பகிர்ந்தார் இயக்குனர் ராசி அழகப்பன்.

Next Story