இனிமே நீங்க வந்தா என்ன?.. வரலனா என்ன?.. ஃபீலிங்கான விஷால்..!

Published on: October 16, 2023
---Advertisement---

Vishal: விஷாலின் சமீபத்திய ஹிட் படமான மார்க் ஆண்டனியால் மீண்டும் கோலிவுட்டில் ட்ரெண்ட் நடிகராகி இருக்கிறார். அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக் உறித்து அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அர்ஜூனுக்கு உதவியாளராக தான் சினிமாவில் எண்ட்ரியானவர் விஷால். பின்னர் செல்லமே படத்தின் மூலம் நடிகராக மாறினார். அவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே வெற்றி படமாக அமைந்தது.

இதையும் படிங்க: நான் இப்ப அதுக்காக வரல!. லியோ பட கேள்வியால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்.. இது தேவையா பாஸ்!.

அடுத்து இவர் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படம் தான் தோல்வி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே தோல்வி படமாக அமைந்தது. அதையடுத்து பாலா இயக்கத்தில் விஷால் நடித்த அவன் இவன் படம் சுமாரான விமர்சனத்தினை பெற்றது. இருந்தும் விஷாலின் நடிப்பு அனைவராலும் பாராட்டுக்களை பெற்றது. 

இதை தொடர்ந்து விஷாலின் படங்கள் எதுவுமே பெரிய அளவில் ஹிட் இல்லாமல் போனது. அதையடுத்து நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றார். விஷாலிடம் கல்யாணம் குறித்த கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம், நடிகர் சங்க கட்டடத்தினை காரணம் சொன்னார்.

இதையும் படிங்க: அப்புறம் என்னங்க அவரே சொல்லிட்டாரே… விஜய்க்காக இறங்கி வந்த சூப்பர்ஸ்டார்..! ஷாக்கான ரசிகர்கள்..!

ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் திருமணம் என்பது அவரவர் சம்மந்தப்பட்டது. ஒருமுறை முடிவு எடுத்துவிட்டு பின்னர் வருத்தப்பட கூடாது. எனக்கு சில கடமைகள் இருக்கிறது. அது முடிந்தவுடன் என் விதிப்படி கல்யாணம் நடந்தால் சரி இல்லையென்றாலும் பரவாயில்லை எனக் கூறி இருக்கிறார் விஷால். சமீபத்தில் அவரின் மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

அதையடுத்து விஷாலின் 34வது படத்தினை ஹரி இயக்கிவருகிறார். சமுத்திரக்கனி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பிரியா பவானி சங்கர் விஷாலின் ஜோடியாக இப்படத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.