சிவகார்த்திகேயனை வேறோடு சாய்த்த விஷால்!.. ஈகோ பார்க்காம செஞ்ச வேலையால் கிடைத்த வெற்றி..

by Rohini |
vishal
X

vishal

Actor Vishal: தமிழ் சினிமாவிற்குள் வந்த கொஞ்ச நாளிலேயே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஏற்படுத்திய தாக்கம் வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயனை வாரி அணைத்துக் கொண்டது.

ஆரம்பத்தில் பல நகைச்சுவை படங்களில் நடித்ததன் மூலம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக மாறினார் சிவகார்த்திகேயன். கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா மாஸ் ஹீரோவாக களமிறங்கினார்.

இதையும் படிங்க: இப்படி பண்ணியே எங்கள மயக்கிப்புட்ட!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்..

சமீபகாலமாக கமெர்ஷியல் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தப்படியான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மாவீரன். விமர்சன ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக அள்ளியது. ரிலீஸாகி உலக முழுவதும் 80 கோடி வரை வசூல் சாதனையை பெற்றது.

இதையும் படிங்க: ஃபிரண்ட்ஸ் படத்தில் நடந்த கொடுமை!. விஜய் மீது இப்போதும் கோபத்தில் இருக்கும் சூர்யா!..

ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த சாதனையை சக நடிகரான விஷால் தட்டிச் சென்றார். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் செண்டிமெண்ட், ஆக்‌ஷன், நகைச்சுவை என எல்லாமுமாக கலந்து இருப்பதால் குடும்பங்களோடு வந்து ரசிகர்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

படம் ரிலீஸாகி முதல் நாளிலேயே 10 கோடி வரை வசூல் ஆனது. அதன் பின் ஒரு வாரகாலத்தில் 50 கோடி வரை வசூலை பெற்றது. இப்பொழுது படம் ரிலீஸாகி 11 நாள்களை கடந்த நிலையில் உலகம் முழுவதும் 87 கோடி வரை வசூலை அடைந்திருக்கிறதாம். இது சிவகார்த்திகேயனின் சாதனையை முறியடித்த படமாக இருக்கின்றது.

இதையும் படிங்க: எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துச்சு… ஆனா? நடந்த ட்விஸ்ட்… ஷாக்கிங் நியூஸ் சொன்ன கமல்ஹாசன்!

இதில் கவனிக்கப்படவேண்டியது எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. அதற்கு முதலில் விஷாலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தான் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் இப்படி எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய அளவில் இடம் கொடுத்திருப்பதே பெரிய விஷயம். அப்படி கொடுத்ததால்தான் இன்று மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

Next Story