Cinema History
சொல்லியும் கேட்காம பிடிவாதம் பிடித்த விஷால்!. ஃபிளாப் ஆன அந்த திரைப்படம்!…
Vishal: நான் சிகப்பு மனிதன் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு விஷால் தன்னுடைய ஐடியாவை கேட்காமல் போனதே காரணம் என பிரபல தயாரிப்பாளர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
நான் சிகப்பு மனிதன்: விஷால் முதலில் தயாரிப்பதாக இருந்த திரைப்படம் தான் நான் சிகப்பு மனிதன். இப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க இருந்தார். பின்னர் அவர் தன்னுடைய கால்ஷீட் பிரச்சனையால் வெளியேற விஷாலே படத்தின் ஹீரோவாக மாறினார்.
இதையும் படிங்க: OTT Release: தீபாவளி ரிலீஸ் படங்களெல்லாம் எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?!.. வாங்க பார்ப்போம்!…
லட்சுமிமேனன் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இயக்குனர் திரு எழுதி இயக்கிய இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் தோல்வியை தழுவியது. இதற்கு நடிகர் விஷாலின் பிடிவாதமே காரணம் என தயாரிப்பாளர் தனஜெயன் தெரிவித்திருக்கிறார்.
தனஜெயனின் ஐடியா: முதல் நாளிலே 12 கோடி வரை வசூல் செய்த திரைப்படம் மொத்தமாக 30 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. முதல் பகுதியில் விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருவருக்கும் இடையேயான காதல் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால் அவர் காதலியை ஐவர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்வது போலவும், அப்போது ஹீரோ தூங்குவது போல் காட்சிப்படுத்தி இருப்பது ரசிகர்களை வெகுவாக பாதிக்கும். அவர்களை படத்தில் ஒன்ற முடியாத படி படத்திற்கு பிரச்சினையை கொடுக்கும்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..
அழகாக காதலித்தவர்கள் இப்படி ஒரு மோசமான நிலையை அடைந்தால் உணர்வுபூர்வமாக ரசிகர்கள் படத்தை விட்டு ஒதுங்கி விடுவர் எனவும் கூறி இருக்கிறார். இதனால் லட்சுமிமேனனை ஐவர் சேர்ந்து மூர்க்கமாக அடித்ததை போல மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்.
விஷால் பிடிவாதம்: எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து அவரை அடிப்பது போல இருக்குமாறு மாற்றி இரண்டாம் பகுதியில் குரல் கொடுத்து அதை சரி செய்து கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார். ஆனால் விஷால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
உடனே தமிழ்நாடு தியேட்டர் உரிமையை விஷால் 9 கோடிக்கு வாங்கி கொண்டார். மற்ற உரிமைகள் விற்று விட்டது. அப்படம் பெரிய அளவில் விருப்பம் இல்லை என்றாலும் என்னுடைய நிறுவனத்துக்கு 4 கோடி லாபம். ஆனால் விஷால் வைத்த நம்பிக்கையால் 4 கோடி நஷ்டம். சென்னையில் ஐந்து கோடியை மட்டுமே வசூல் செய்தது.
இருந்தும் அவருக்கு உதவ வேண்டும் என்பதற்காக தெலுங்கு உரிமையை நான் எடுத்துக் கொண்டேன். என்னுடைய ஐடியாவின் பேரில் டப்பிங் மாற்றி அப்படத்தை தெலுங்கில் வெளியிட்டேன். படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆக மாறியது. ஜூனியர் என்டிஆர் இயக்குனர் திருவிற்கு கால் செய்து பாராட்டு கதை கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.