Categories: Cinema News latest news

மார்க் ஆண்டனி ஹிட் அடிச்சும் அது நடக்கலயே!.. புலம்பும் விஷால்!. ஐயோ பாவம்!..

Actor Vishal: புரட்சித் தளபதி விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தப் படத்தில் விஷாலுடன் சேர்ந்து நடிகர் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

சமீப காலமாகவே விஷால் நடிப்பில் வெளிவந்த எந்த படங்களும் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அவர் நடிப்பில் கடைசியாக இரும்புத்திரை என்ற திரைப்படம் தான் ஓரளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: எதிர்நீச்சல்: ஆவேசத்தில் ஈஸ்வரி… அடி வாங்கிய கதிர்… புலம்பி தள்ளும் நந்தினி…

அதனை அடுத்து வெளியான எந்த படங்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியை ருசிக்கவில்லை. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் லத்தி என்ற படம் வெளியாகி படு தோல்வியை தழுவியது.

அதன் பிறகு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை இந்த படத்தின் மூலம் விஷால் பதிவு செய்திருக்கிறார். அதுவும் இவருடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அனைவரையும் மிரட்ட வைத்தது.

இதையும் படிங்க:இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

படத்தில் அமைந்த பின்னணி இசை, நகைச்சுவை காட்சிகள், கதாபாத்திரங்களை சுற்றி இருந்த கதைக்களம் என அனைத்துமே சிறப்பாக இருந்ததனால் இது ஒரு பிளாக்பஸ்டர் படமாகவே மக்களிடையே பிரதிபலித்தது.

இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி முதல் நாளிலேயே ஒன்பது கோடி வரை வசூலித்தது. அதனால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் விஷால் 100 கோடி கிளப்பில் இணைவாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..

இதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் படம் ரசிகர்களிடையே ஒரு திருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படம் 100 கோடி வரை வசூலை பெறாது என்றும் 100 கோடி கிளப்பில் விஷால் இணைவது சந்தேகம்தான் என்றும் சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini