Cinema News
உன் சின்சியாரிட்டிக்கு அளவே இல்லையா? ஒரு வீடியோவை போட்டு மொத்த கோலிவுட்டிற்கும் ஆப்பு வச்ச விஷால்
Actor Vishal: விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கினார். படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ். தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்த விஷாலுக்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. ஆனால் அவரே எதிர்பார்க்காத ஒரு வெற்றியை இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெற்று கொடுத்தது.
இதையும் படிங்க: எதிர்நீச்சல்: ஆவேசத்தில் ஈஸ்வரி… அடி வாங்கிய கதிர்… புலம்பி தள்ளும் நந்தினி…
குறிப்பாக இந்தப் படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை தான் அனைவரும் பாராட்டி வந்தார்கள். இதனைத் தொடர்ந்து படம் வெளியாகி ஒன்பது நாட்கள் முடிவில் 82 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி பதிப்பிற்கு சி.பி.எஃப்.சி சான்றிதழ் பெறுவதற்கு ஆறரை லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்ததாக நடிகர் விஷால் மும்பை மத்திய திரைப்பட தணிக்கை குழு மீது குற்றம் சாட்டி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..
அவர் பகிர்ந்த வீடியோ மூலம் நல்ல ஒரு தீர்வு கிடைத்ததாக பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு நன்றியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் பதிவிட்டிருந்தார். இதில் ஒன்றை யோசிக்க வேண்டும்.
அதாவது லஞ்சத்திற்கு எதிராக விஷால் குரல் கொடுத்தது ஒருவகையில் சரிதான் என்றாலும் அவரும் லஞ்சம் கொடுத்து தான் அந்த சலுகையை பெற்றிருக்கிறார். இதை அவர் லஞ்சம் கொடுக்கும் போதே அதிகாரிகளிடம் சொல்லி இருந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் நேரடியாகவே அன்று சிக்கி இருப்பார்கள்.ஆனால் அதை விஷால் செய்யவில்லை.
இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..
அதற்கு பதிலாக தன்னுடைய படத்திற்காக எல்லா சலுகைகளையும் பெற்ற பிறகே இதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் விஷாலை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இது கண்டிப்பாக அவருடைய படத்திற்கான ப்ரமோஷன் ஆகத்தான் தெரிகிறது என சினிமா உலகில் பேசிக்கொள்கிறார்கள்.
ஒரு பக்கம் இது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருந்தாலும் அந்த நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு செயலை எல்லா சலுகைகளையும் அனுபவித்து தன் படம் ரிலீஸ் ஆன பிறகு விஷால் செய்தது ஒரு நெருடலாகவே இருக்கிறது எனவும் சினிமா பத்திரிக்கையாளர்கள் பேச துவங்கியுள்ளனர். அதேபோல் இதன் பிறகு அங்கு போகும் தமிழ் படங்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகும் எனவும் குண்டை தூக்கி போட்டுள்ளனர்.