மார்க் ஆண்டனி திரைப்படத்தை செப்டம்பர் 15-ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த தேதியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று ரெட் ஜெயன்ட் நிறுவனம் தடுத்தது தான் எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை என விஷால் வெளிப்படையாக பேசி உள்ளார்.
சினிமா யாருக்கும் சொந்தமில்லை என்றும் இப்ப தமிழ் சினிமாவே என் கையில தான் இருக்கு என எவன் எவன் ஒருத்தன் சொல்கிறானோ நிச்சயமா நல்லாவே இருக்க முடியாது என சாபமே விட்டுவிட்டார் விஷால்.
இதையும் படிங்க: ஷங்கரின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ரஜினி! அது மட்டும் நடக்கலைனா இன்று ஷங்கரின் நிலைமை
உதயநிதி ஸ்டாலினிடம் அந்த நபரை சண்டக்கோழி படத்துக்கு பிறகு சேர்த்து விட்டதே நான்தான். அப்படி இருக்க என்னோட படத்தையே தள்ளி வான்னு சொல்ல அவன் யாரு. அதனால் தான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.
சும்மா ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு அந்த தேதிக்கு வா இந்த தேதிக்கு வான்னு சொல்றது என்ன நியாயம். மார்க்கண்டன் படத்தோட தயாரிப்பாளர் 65 கோடி செலவு செய்து வெயிலில் கஷ்டப்பட்டு இருக்கிறார். அந்த படம் சரியான தேதியில் ரிலீஸானால் தான் வெற்றி பெறும் என நினைத்து அவர் ஒன்றரை மாதத்துக்கு முன்னதாகவே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்.
இதையும் படிங்க: பிரசாந்தை கூப்ட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க!.. விசில் போடு பாட்டுல பாவம் அவரு.. பிரபலம் வேதனை!..
கடைசி நேரத்தில் வந்துவிட்டு இப்போ ரிலீஸ் செய்யாதீங்க, அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க எனக்கு சொல்றதுக்கு நீ யாரு என கொந்தளித்த விஷால் இது எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் இல்லை அதனால் தான் அவர்கள் அப்படி ஆடுகின்றனர் என ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்ற தயாரிப்பு நிறுவனம் படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் எப்படி தடுக்கிறது என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார் விஷால்.
உதயநிதியை எதிர்த்து விஷால் அரசியலுக்கு வரவும் இதுதான் காரணமா? என ரசிகர்கள் தற்போது கேள்வியை எழுப்பி வருகின்றனர். 2026ம் ஆண்டு விஷாலும் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ளார். அவர் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. அந்த படத்துக்கும் குடைச்சல் கொடுப்பாங்க என பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையை சீரழிக்க மாட்டேன்!.. என்ன திடீர்னு விஷால் இப்படி சொல்லிட்டாரு!
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…