விஜய்யை தொடர்ந்து ரஜினியையும் வம்பிழுத்த விஷால்!.. என்ன இப்படி சொல்லிட்டாரு!..

தனது அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், அடுத்து விஷாலும் தொடர்ந்து அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். ஆனால், இப்போதைக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை என்றும் அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல, மக்களுக்காக உழைக்க வேண்டும் என விஷால் விஜய்யை சீண்டும் விதமாகவே பேசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால், நான் அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு அதன் பின்னர் வரமேட்டேன்னு சொல்லி பின்வாங்குபவன் அல்ல. அரசியலுக்கு வரேன்னு சொல்லிவிட்டால் கட்டாயம் வருவேன் என பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஃபிளாப் ஆகவேண்டிய படம் ஹிட் ஆனது இப்படித்தான்!. நல்லவேளை விக்ரம் பிரபு தப்பிச்சார்!…

நடிகர் ரஜினிகாந்தை தான் விஷால் இப்படி பேசி மறைமுகமாக தாக்கி உள்ளார் என்றும் லால் சலாம் படத்தின் ரிலீஸ் நாளில் விஷால் எதை மனதில் வைத்து இப்படி பேசினார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஷாலை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என விஷால் நடத்திய அரசியல் பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும் என்றும் சாப்பிடும் இடங்களில் காமெடி பண்ணுகிறார் விஷால் என்றும் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்துக் கொண்டு வெளிநாட்டில் ஒரு வாரம் ஜாலி பண்ணிட்டு பொறுமையா வந்து பேசுபவரை எல்லாம் நாங்க கண்டுக் கொள்ள மாட்டோம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விளாசி உள்ளனர்.

இதையும் படிங்க: சூரிக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா! ஹீரோயின் என்ன ஐயா படத்துல வர நயன்தாரா மாதிரி இருக்காரே!..

 

Related Articles

Next Story