Categories: latest news

100 கோடி வசூல் செய்த மார்க் ஆண்டனி!.. 10 கோடியாவது ரத்னம் வசூல் செய்யுமா?.. 3 நாள் வசூல் எவ்வளவு?..

விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் மேனன், முரளி ஷர்மா நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்களிலும் ஒரே சீரான வசூலை அள்ளி இருக்கிறது. ஹரி தாமிரபரணி மற்றும் பூஜை படங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் விஷால் இணைந்து நடித்துள்ள ரத்னம் திரைப்படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரத்னம் படத்தை வெளியிட விடாமல் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக ஆடியோ வெளியிட்டு நடிகர் விஷால் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஏற்கனவே முந்தைய படத்திற்கு அவர் தர வேண்டிய தொகையை சரியாக செலுத்தவில்லை என யாரோ கொடுத்த லெட்டரை வைத்து திரையரங்கு உரிமையாளர்கள் தனது படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாக விஷால் கூறியிருந்தார். மேலும் அதனை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நேத்து ராத்திரி யம்மா!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!..

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில் தொடர்ந்து சீரான ஓட்டத்தை திரையரங்குகளில் அந்த படம் நடத்தி வருகிறது.

ரத்னம் திரைப்படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாம் நாள் அந்த படம் 2.7 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது, ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2.15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: இதெல்லாம் பார்த்தா விஷாலுக்கு எரியுமா?.. எரியாதா?.. 2வது சன்டேவிலும் மொத்த தியேட்டரும் ஆடுதே!..

விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை ஏழு கோடி ரூபாய் வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது மிகவும் குறைந்த வசூல் என்றும் முதல் வாரமே படம் பிக் ஆகவில்லை என்றால் இரண்டாம் வாரம் எல்லாம் வசூல் செய்வது ரொம்பவே கஷ்டம் எனக்கு கூறுகின்றனர்.

மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், விஷாலின் ரத்னம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 10 கோடி ரூபாய் வசூல் வருவது பெரிய விஷயம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றும் சூப்பர்ஸ்டார்… அடுத்த வில்லன் யார் தெரியுமா?..

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

7 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

9 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago