நடிகர் சங்கத்தை மீண்டும் கைப்பற்றும் விஷால் அணி...வாக்கு எண்ணிக்கையில் முன்னணி....

by சிவா |
vishal
X

சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலரும் பல வருடங்களாக கையில் வைத்திருந்த நடிகர் சங்கத்தை நடிகர் விஷால், நாசர், கார்த்தி ஆகியோரின் அணி சில வருடங்களுக்கு முன்பு கைப்பற்றியது. நடிகர் சங்க தலைவராக நாசர் வெற்றி பெற்றார்.

பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை நடத்தி வந்தனர். அதேபோல், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் விஷால் வெற்றி பெற்று தலைவராக இருந்தார்.

vishal

ஒருபக்கம் விஷால் பண மோசடி செய்துவிட்டதாக திரையுலகில் பலரும் அவர் மீது புகார் கூறினார். ஆனால், விஷால் அதை மறுத்தார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் தயாரிப்பாளர் சங்கம் அரசின் கைக்கு சென்றது. அரசு அதிகாரி ஒருவர் அதை நிர்வகித்து வந்தார்.

ஒருபக்கம், கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் விஷால் அணி அப்படியே போட்டியிட்டது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

vishal

இந்நிலையில், அந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், விஷால் அணியினர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 115 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜ் 92 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 259 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ் 173 ஓட்டுகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர். அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி 326 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் பிரசாந்த் 164 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர். அதேபோல், விஷால் அணியை சேர்ந்த கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்கள்.

இதைப்பார்க்கும் போது நடிகர் சங்கத்தை மீண்டும் விஷால் அணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

Next Story