இவ்வளவு கத்தியும் எவனுமே கண்டுக்கலயே!. கடுப்பில் விஷால் எடுத்த முடிவு!.....
நடிகர் விஷாலுக்கு கடந்த பல வருடங்களாகவே இறங்கு முகம்தான். இரும்பு திரை படத்திற்கு பின் அவர் நடிப்பில் எந்த படங்களும் வெற்றியை பெறவில்லை. அவர் பெரிதும் எதிர்பார்த்த சண்டக்கோழி 2-வும் மண்ணை கவ்வியது.
எனவே, மிஷ்கினை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை துவங்கினார். 30 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால், மிஷ்கினுடன் மோதல் ஏற்பட்ட, அப்படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். எனவே, அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் எனிமி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை கவராமல் தோல்வியை பெற்றது.
எனவே, வீரமே வாகை சூடும் பட அறிவிப்பை வெளியிட்டார் விஷால். பொதுவாக விஷால் ஒரு படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் எனில் அப்படத்தில் சேட்டிலைட் உரிமை, ஹிந்தி டப்பிங் உரிமை ஆகியவை நல்ல விலைக்கு போகும். படப்பிடிப்பு துவங்கும் முன்பே அந்த வியாபாரங்கள் முடிந்துவிடும்.
ஆனால், வீரமே வாகை சூடும் படம் தொடர்பாக எந்த வியாபாரமும் நடைபெறவில்லை. யாருமே அவரை அணுகவில்லையாம். இதனால் அப்செட் ஆகித்தான் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் லண்டனில் துவங்கவுள்ள என்கிற அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளாராம்.
விஷாலின் நடிப்பில் கடைசியாக வெளியான பல படங்கள் வெற்றியை பெறவில்லை என்பதால் அவர் நடிக்கும் படங்களின் வியாபார மதிப்பு அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.