மூன்று நாள் அதிலிருந்து விடுபட முடியவில்லை.! கதறி அழுத விஷால்.! நெகிழ்ச்சி பதிவு.!

by Manikandan |   ( Updated:2022-02-08 09:03:51  )
மூன்று நாள் அதிலிருந்து விடுபட முடியவில்லை.! கதறி அழுத விஷால்.! நெகிழ்ச்சி பதிவு.!
X

விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் வீரமே வாகை சூடும். பொதுவாகவே விஷால் படத்திற்கு பிரச்சனைகள் எழும். ஆனால், அதிசயமாக இந்த படத்திற்கு பிரச்சனைகளை முன்பே களைந்து, ரிலீஸ் தேதிக்கு முன்பே, படத்தை விநியோகிஸ்தர்கள் கையில் ஒப்படைத்துவிட்டார் விஷால்.

இந்த படத்தை து.பா.சரவணன் எனும் புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். டிம்பிள் ஹயாத்தி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆக்சன், செண்டிமெண்ட் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி இருந்தது.

இதையும் படியுங்களேன் - இதெல்லாம் நம்பலாமா வேண்டாமா தெரியலே.! இணையத்தில் உலவும் மர்மங்கள்.!

இந்த படத்திற்கு விமர்சனங்கள் நன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை எழுதும் போதே இயக்குனர் அழுதுவிட்டாராம். அதே போல, ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலிடம் இந்த காட்சியை விளக்குகையில், அவர் சில நிமிடம் அமைதியாக இருந்தாராம்.

பின்னர், கிளிசரின் போடாமல் நிஜமாக கண்ணீர் விட்டு அழுது அந்த காட்சியை நடித்து முடித்துள்ளார் விஷால். மேலும், ஷூட்டிங் முடிந்து 3 நாள் ஆகியும் அதன் பாதிப்பு அப்படியே இருந்ததாம். இதனை விஷால் படக்குழுவினரிடம் தெரிவித்து உள்ளார்.

Next Story