Cinema History
இந்த படத்துக்கு இவர் செட்டாக மாட்டார்!… ரஜினிகாந்தை நினைத்து தயங்கிய விசு… நம்பிக்கை கொடுத்த கே.பாலசந்தர்…
Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே தன்னுடைய இந்த படத்துக்கு செட்டாக மாட்டார் என விசு தயங்க அதற்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கே.பாலசந்தர் சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்து இருக்கிறார். வில்லனாக எண்ட்ரி கொடுத்தவர். சில படங்கள் கழித்து கே.பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிய முன்னணி நட்சத்திரமாக மாறினார்.
இதையும் படிங்க: கார் டிரைவருக்காக அப்படி ஒரு விஷயத்தைச் செய்த கேப்டன்…! அந்த மனசு தான் கடவுள்..!
நிறைய ஆக்ஷன் ரோலில் நடித்து முழுக்க கமர்ஷியல் நாயகனாகவே வலம் வந்தார். அப்போது ரஜினியின் படங்களில் எமோஷனல் மற்றும் சண்டைக்காட்சிகளே அதிகம் இருக்கும். இந்நிலையில் இந்தியில் ஹிட்டடித்த கோல்மால் படத்தினை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மாதவி நடிக்க கே.பாலசந்தர் இயக்குவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கமர்ஷியல் நாயகனான ரஜினியை காமெடி ரோலில் நடிக்க வைப்பது சரியாக இருக்குமா என படக்குழுவுக்கே கேள்வி எழுந்ததாம். பலரும் அவருக்கு பதில் நாகேஷை நடிக்க வைக்கலாம் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…
அப்போது தில்லுமுல்லு படத்துக்கு கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்த விசு தான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதினாராம். ஆனால் அவருக்கும் இந்த கேரக்டரில் ரஜினி செட்டாவாரா என்ற கேள்வி இருந்ததாம். நாகேஷை அவரும் பரிந்துரைக்கவும் செய்து இருக்கிறார்.
ஆனால் பாலசந்தர் எனக்கு இந்த படத்துக்கு ஹீரோ தான் வேண்டும். காமெடியன் இல்லை எனக் கூறி ரஜினியை நடிக்க வைத்து படத்தினை ரிலீஸ் செய்தாராம். யாரும் எதிர்பார்க்காத அளவு ரஜினியின் காமெடிகள் ரசிக்கப்பட்டு படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.