விஸ்வரூபம் நான் இயக்க வேண்டிய படம்.! தனுஷால்தான் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாம்.! புலம்பிய இயக்குனர்.!

பெரும்பாலும் கடைசியாக வந்த பல கமல்ஹாசன் திரைப்படங்கள் கமலின் கதை, திரைக்கதையில் உருவானவை. அதில் சிலவற்றை மட்டுமே கமல் இயக்கி இருப்பார். மற்றவை மற்ற இயக்குனர்களால் இயக்கப்படும். பல திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின.
அப்படி முதலில் விஸ்வரூபம் திரைப்படத்தை கமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி முடித்துவிட்டு வேறு ஒரு இயக்குனர் வைத்து தான் படமாக்க வேண்டும் என்று முடிவுசெய்து முதலில் அழைத்த நபர் செல்வராகவன்.
செல்வராகவன் மற்றும் கமல்ஹாசன் முதலில் விஸ்வரூபம் படத்தின் வேலைகளை பற்றி விவாதித்து வந்துள்ளனர். அதேநேரத்தில் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தின் கதையை எழுதி வந்தார்.
இதையும் படியுங்களேன் - அந்த நடிகையோடு நடிக்கக் கூடாது!... விஜய்க்கு கண்டிஷன் போட்ட எஸ்.ஏ.சி.....
அதன்பிறகு சில காரணங்கள் காரணமாக விஸ்வரூபம் படத்திலிருந்து செல்வராகவன் விலகிவிட்டார். அதன் பிறகுதான் செல்வராகவன், தம்பி தனுஷை வைத்து மயக்கம் என்ன படத்தை இயக்கி முடித்தார்.
இந்த தகவலை செல்வராகவன் அன்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அப்போது முதலில் விஸ்வரூபம் படத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். பிறகு மயக்கம் என்ன படத்தின் வேலைகள் இருந்ததால் அதிலிருந்து விலகி மயக்கம் என்ன படத்தை இயக்கினேன் என கூறினார்.
ஒரு வேளை மயக்கம் என்ன திரைப்படத்தை இயக்காமல் இருந்திருந்தால் செல்வராகவன் விஸ்வரூபம் படத்தை அவரது பாணியில் இயக்கி இருப்பார் போல.