“பாகுபலி” க்கு பயந்து பேக் அடித்த கமல்… நடுவில் சிக்கிய விவேக்…அடப்பாவமே!!

மறைந்த நடிகர் விவேக் தனது சிந்திக்கவைக்கும் நகைச்சுவையால் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர். பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த விவேக், அவரது கருத்துக்களை தனது திரைப்படங்களிலும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திடீரென வந்த இவரது மரண செய்தி மக்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

விவேக் பல திரைப்படங்களில் காமெடி ரோலில் கலக்கியிருக்கிறார். எனினும் அவர் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த “வெள்ளைப்பூக்கள்” திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் இவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை.

இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி விவேக் கதாநாயகனாக நடித்த “பாலக்காட்டு மாதவன்” என்ற திரைப்படம் வெளியானது. அதே போல் “பாகுபலி” திரைப்படம் அதே ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி வெளியானது. “பாகுபலி” திரைப்படத்திற்கு முந்தைய வாரமே “பாலக்காட்டு மாதவன்” திரைப்படம் வெளிவர நேர்ந்ததால் அத்திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது. விவேக்கும் படக்குழுவினரும் நல்ல லாபம் பார்த்துவிடலாம் என நினைத்திருக்கின்றனர்.

ஆனால் இந்த நிலையில் தான் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்திருக்கிறது. கமல்ஹாசன் நடித்த “பாபநாசம்” திரைப்படம் அதே ஆண்டு ஜீலை மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நாளில் தான் “பாகுபலி” திரைப்படமும் வெளியாகிறது என்பதால் “பாபநாசம்” திரைப்படத்தை படக்குழுவினர் ஜூலை 3 ஆம் தேதியே வெளியிட முடிவுசெய்திருக்கின்றனர். இதனால் “பாலக்காட்டு மாதவன்” திரைப்படத்திற்கு கிடைத்த தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். விவேக் இது சம்பந்தமாக உதவி கேட்க தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியிருக்கிறார். ஆனால் எந்த பயனும் இல்லாமல் போயிருக்கிறது.

ஆதலால் “பாலக்காட்டு மாதவன்” திரைப்படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து ஒரு பேட்டியில் விவேக் மிகவும் மனம் நொந்துப்போய் இந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

 

Related Articles

Next Story