தண்ணீர் பாட்டில் தராததால் படத்தில் இருந்து விலகிய விவேக் பட நடிகை… இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவாங்க!!
கவியரசர் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன், விவேக்குடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார். இவர் ஒரு பிரபல இயக்குனரும் கூட.
இந்த நிலையில் அண்ணாதுரை கண்ணதாசன் இயக்கிய “அலேக் மருது” திரைப்படத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் அவர்.
“அலேக் மருது” திரைப்படத்தில் ராம்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் விவேக் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதில் விவேக்குக்கு ஜோடியாக ஒரு மிகப் பிரபலாமான நடிகையின் மகளை ஒப்பந்தம் செய்திருந்தார்களாம்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை மைசூரில் நடத்துவதாக முடிவானது. அதன் படி மொத்தப் படக்குழுவும் மைசூருக்கு பயணமானது. அங்கே அனைவருக்கும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கவைத்தனர். அப்போது விவேக்குக்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை, “எனக்கு மட்டுமே ஒரு பெட்டி அளவு மினரல் வாட்டர் பாட்டில்கள் வேண்டும். இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன்” என கண்டிசன் போட்டாராம். அந்த காலகட்டத்தில்தான் மினரல் வாட்டர் என்ற ஒன்றே அறிமுகமானதாம். ஆதலால் அதன் விலை மிக அதிகமாம். ஒருவருக்கு எப்படி அத்தனை பாட்டில்களை வாங்கித் தரமுடியும், மேலும் இது சின்ன பட்ஜெட் படம் என்பதால் இது சரிவராது என்று நினைத்த இயக்குனர் “அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம். அவரை கிளம்பச் சொல்லுங்கள்” என கூறிவிட்டாராம்.
அந்த நடிகையும் சென்னைக்கு கிளம்பிவிட்டாராம். அதன் பின் விவேக்குக்கு ஜோடியாக மற்றொரு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகை மைசூருக்கு வந்த இரண்டாவது நாள், இயக்குனரை சந்தித்து திடீரென அழுதாராம். “ஏன் அழுகுற?” என கேட்க “நான் எனது குழந்தையை எனது மாமியாரின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை தொலைப்பேசியில் அழைத்து என் குழந்தையை வேண்டுமென்றே கிள்ளி அழவைத்து காட்டுகிறார். அதனால் நான் போயாக வேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள்” என கூறிச் சென்றுவிட்டாராம்.
அதன் பின் கன்னடத்தில் அப்போது மிகப்பெரிய நடிகையாக இருந்த தாராவை விவேக்குக்கு ஜோடியாக நடிக்க அணுகினார்களாம். இது குறித்து ஹோட்டல் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது அந்த ஹோட்டல் மேனேஜர் “என்னப்பா, மெட்ராஸ்ல இருந்து வந்து தாராவை நடிக்க வைக்கலாம்ன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. தாரா இங்க கன்னடத்துல எவ்வளவு பெரிய நடிகை தெரியுமா?, நீங்க கூப்பிட்டதும் அவுங்க வந்துடுவாங்களா என்ன?” என்று இளக்காரமாக கூறினாராம்.
ஆனால் தாரா “பறவைகள் பலவிதம்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக அப்போது பணிபுரிந்த அண்ணாதுரை கண்ணதாசனுடன் நல்ல நட்பில் இருந்திருக்கிறார். ஆதலால் அவர் தாராவுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை கூறியவுடன் உடனே மைசூருக்கு கிளம்பி வந்துவிட்டாராம். இதனை பார்த்து அந்த ஹோட்டல் மேனேஜர் அரண்டுப்போய்விட்டாராம்.
அதன் பின் விவேக்குக்கு ஜோடியாக அத்திரைப்படத்தில் நடித்துக்கொடுத்திருக்கிறார் தாரா. மேலும் அத்திரைப்படத்தை உருவாக்கும்போது பல பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பல தடங்களை கடந்து “அலேக் மருது” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்தாலும் அத்திரைப்படம் வெளிவரவில்லை என்பதுதான் சோகமே…