Categories: Cinema History Cinema News latest news

பிரபலத்துக்கு ஆசையாக கொடுத்த பரிசு.. அவர் சொன்ன பதிலால் விழுந்து விழுந்து சிரித்த விவேக்.. சுவாரஸ்ய சம்பவம்..!

Vivek: தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் விவேக். அவர் எப்போதும் தன்னுடன் நடிப்பவர்கள் வளர வேண்டும் என நினைத்து நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி அவர் செய்த ஒரு உதவியால் வயிறு வலிக்க சிரிக்கும் சம்பவமும் நடந்து இருக்கிறதாம்.

சின்ன வேடத்தில் தொடங்கிய வாழ்க்கை விவேக் உடையது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நடிப்பை வளர்த்து கொண்டவர். ஒரு கட்டத்தில் தன் ரூட் காமெடி தான் என்பதை சரியாக பிடித்து கொண்டார். அடிக்காமல், இன்னொருவரை அசிங்கப்படுத்தாமல் செய்து விவேக்கின் காமெடிகள் ஹிட் ரகம்.

இதையும் படிங்க: ரச்சிதா என்னை மாமியாராவே பார்க்கலை… இப்பக்கூட இது நடந்துச்சு… தினேஷின் பெற்றோர் சொன்ன சம்பவம்!

அவர் கஷ்டப்பட்டதாலே என்னவோ தன்னுடன் நடிக்கும் சின்ன நடிகர்களை ரொம்பவே நடிப்பாராம். அப்படி இருக்கும் போது ஒரு முறை தன்னுடைய ஒரு ஷூட்டிங்கினை முடித்து விட்டு இன்னொரு படத்தின் ஷூட்டிங்கிற்கு ஏவிஎம் கிளம்பி சென்று கொண்டு இருந்தாராம்.

அப்போது அவர் எல்லா சிக்னலிலும் சிக்க வேண்டிய நிலை உருவானது. மழை நேரம் வேறு. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையில் கூட ஒரு சைக்கிள் காரர் விவேக்கின் காரை ஃபாலோ செய்தே சைக்கிளை மிதித்து கொண்டு வந்தாராம். ஒரு கட்டத்தில் யார் இவர் என பார்க்க அது தன்னுடைய சுதந்திரம் படத்தில் நடிக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் என தெரிய வருகிறது. இதையடுத்து இருவருமே படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சென்று விடுகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமானவர்னு தெரிஞ்சும் அவர் கூட போனதுதான் நான் செஞ்ச தப்பு! நடிகையின் வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?

விவேக் தன்னுடைய நண்பரான செல் முருகனை கூப்பிட்டு இந்த விஷயத்தினை கூறி இருக்கிறார். அவரும் ஆமா சார் நானும் பார்த்தேன் என்கிறார். சரி அவருக்கு உடனே ஒரு எக்ஸல் பைக்கினை ரெடி செய்யுங்க என உத்தரவிடுகிறார். மாலை அவருக்கு தன் கையால் சாவியை பரிசாக கொடுக்க அவர் எந்த வித சலனமும் இல்லாமல் இருந்தாராம். என்னவென விவேக் கேட்க, என்னால் சைக்கிளை எவ்வளவு தூரம் வேணாலும் மிதிக்க முடியும்.

ஆனால் பைக்கில் உட்கார்ந்தாலே உதறும் என்றாராம். அங்கிருந்தவர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க உடனே விவேக் செல் முருகனை கூப்பிட்டு பைக்கினை திருப்பி கொடுத்து விட்டு அந்த காசை வாங்கி இவரிடம் கொடுங்கள் எனச் சொல்லி சிரித்து கொண்டே சென்றாராம். அந்த நடிகர் சுதந்திரம் படத்தில் விவேக் மூக்கை கடிக்க சொன்ன காமெடியில் புகழ் பெற்ற நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan