More
Categories: Entertainment News

ஐய்யய்யோ தாறுமாறு!…கட்டழகோ கூல் மோரு!… சுண்டி இழுக்கும் அஞ்சனா…

சன் மியூசிக் தொலைக்காட்சி ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கிய சமயத்தில் தொலைப்பேசியில் ரசிகர்களின் விருப்பத்தை கேட்டு பாடல்களை ஒளிபரப்பி பிரபலமானவர் விஜே அஞ்சனா ரங்கன். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

வீடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, மாடல் என இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertising
Advertising

இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், குழந்தை பெற்றவர் போல் தெரியாதவாறு தனது அழகை பேணி பாதுகாத்து வருகிறார். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் இவர் செய்து வருகிறார்.

ஒருபக்கம், மாடலிங், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருக்கிறார். மேலும், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில், கேஜிஃப் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts