மர்மம் உடைந்த சித்ரா தற்கொலை வழக்கு... பரபரப்பு தேடுகிறாரா விஜே சரண்யா?..வெளியான அதிர்ச்சி..
சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தற்கொலை இரண்டு வருடங்களை தாண்டியும் இன்று பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து தற்போது சரண்யா பேசி இருக்கும் ஒரு வீடியோ தகவல்களும் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அதிக ரசிகர்களை சேர்த்தவர் இரண்டு வருடத்திற்கு முன்னர் திடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அவ்வளவு கோழை இல்லை. இது கொலை என ஒரு தரப்பு சொல்லிக் கொண்டே இருந்தது. சித்துவின் கடைசி நாள் ஷூட்டிங்கில் அவருடன் இருந்த விஜே சரண்யா தற்போது மனம் திறந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, நான் இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தேன். அதனால் தான் என்னால் எதுவும் பேச முடியவில்லை. சித்ராவின் உடல் உறுப்புகள் எல்லாம் இன்னமும் பாரன்சிக்கால் பதப்படுத்தப்பட்டு வருகிறது. கடைசி நாள் ஷூட்டிங்கில் அவளை பார்த்த போது என் மடியில் படுத்து அழுதாள்.
இதையும் படிங்க: விஜய் டிவி ரக்ஷன் சித்ராவிற்கு தொடர் தொல்லைகள் கொடுத்தாரா? சித்ராவின் மரண வழக்கில் புதிய திருப்பம்…
ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அவசர அவசரமாக நிறைய வங்கி பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் பதற்றமும், கவலையும் இருந்தது. சித்து ரிஜெஸ்டர் மேரேஜ் செய்து விட்டாள். அவள் வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால் என்னால் அதிக தகவல்களை பொதுவெளியில் பகிர முடியாது. அவளுக்கும், கணவருக்கும் இருந்த உறவு குறித்தும் என்னால் கூற முடியாது எனத் தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவில் சரண்யாவிற்கு சித்து அனுப்பிய ஆடியோவும் ப்ளே செய்து காட்டியிருந்தார். ஆனால் இரண்டு வருடம் கழித்து மன அழுத்தம் குறைந்த பின்னர் இண்டர்வியூ கொடுக்கிறேன் என சரண்யா கூறினாலும், இது பாப்புலாரிட்டி தேடுவதற்காகவே செய்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் தட்டி வருகின்றனர்.