latest news
கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாமா? மேடையிலேயே அறந்தாங்கி நிஷாவை வெளுத்து வாங்கிய விடிவி கணேஷ்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ திரைப்படத்தின் விழாவில், மேடையில் சொந்தக் கதை பேசிய நடிகை அறந்தாங்கி நிஷாவை நடிகர் விடிவி கணேஷ் கடுமையாக விமர்சித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன், தற்போது தனது இரண்டாவது படமான ‘லீடர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சின்னத்திரை பிரபலமும், காமெடி நடிகையுமான அறந்தாங்கி நிஷாவும் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், வழக்கம்போல தனது ஜாலியான பாணியில் பேச்சைத் தொடங்கினார். ஆனால், மேடையில் லீடர் திரைப்படத்தைப் பற்றியோ அல்லது படக்குழுவினரின் உழைப்பைப் பற்றியோ பேசாமல், தனது கணவருடன் ஊர் சுற்றிய கதைகளையும், தனது சொந்த விஷயங்களையும் கலகலப்பாகப் பகிர்ந்துகொண்டார்.
அதுமட்டுமின்றி, லெஜெண்ட் சாரே நினைக்கலாம் தனது அடுத்த படத்தில் தன்னை ஹீரோயினாக போட்டுவிடலாம் என்று ஆதாவது அடுத்த படத்தில் எப்படியாவது லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு அரங்கத்திலிருந்த பலரும் சிரித்தனர்.
நிஷாவின் இந்த ஜாலியான பேச்சு அரங்கத்தில் இருந்த சிலரை சிரிக்க வைத்தாலும், நடிகர் விடிவி கணேஷுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியது.
அடுத்து பேசிய விடிவி கணேஷ், நிஷாவின் பேச்சை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கினார். இதற்கு முன் பேசிய பெண் படத்தை பற்றியோ அல்லது ஹீரோ லெஜெண்ட் சரவணனை பற்றியோ அலல்து டீமை பற்றியே பேச வேண்டும். ஆனால் நிஷா படத்தை பற்றியே பேசவில்லை. அதுமட்டுமின்றி அடுத்த படத்தில் ஹீரோயினாக ஆகவேண்டுமாம். எனக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. படத்தைப் பற்றிப் பேசாமல் தனது சொந்தக் கதையைப் பேசுகிறாரே.. கொஞ்சமாவது விவஸ்தை வேண்டாமா?” என்று மேடையிலேயே காட்டமாக விளாசித் தள்ளினார்.
தற்போது இந்த விழாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
