Connect with us
Rajnikanth

Cinema History

மலையாளக் கரையோரம்… பாடலில் முதலில் நடிக்க இருந்தது இவரா? அப்புறம் எப்படி மிஸ் ஆச்சு?

ராமராஜனுக்குப் போட்ட பாட்டு ரஜினிக்கும், ரஜினிக்குப் போட்ட பாட்டு ராமராஜனுக்கும் வந்துள்ளது. அது எப்படின்னு மக்கள் நாயகனே சொல்றாரு. அதுமட்டுமல்லாம ரஜினி இன்னைக்கு வரை சூப்பர்ஸ்டாரா இருக்காருன்னா அதுக்கு என்ன காரணம் என்றும் அவரே சொல்லி இருக்கிறார். வாங்க பார்க்கலாம்.

ரஜினிகாந்தை ‘மூன்று முடிச்சு’ படத்தில் நான் பார்த்து ரசித்துருக்கேன். தனக்கென ஒரு தனி ஸ்டைல உருவாக்கி இன்னைக்கு இந்த வயசுலயும் வேர்ல்டு லெவல்ல அவரு படம் பிசினஸ் ஆச்சுன்னா கிரேட் தான் என்கிறார் ராமராஜன்.

ரஜினி ஒரு தடவை இளையராஜா கிட்ட ‘சாமி என்ன அவருக்கு மட்டும் ஸ்பெஷலா போடுறீங்க?’ன்னு கேட்டாராம். ரஜினி ‘அவனுக்குன்னா பொட்டில வருது’ன்னு சொன்னதாக அமரன் எங்கிட்ட சொன்னாரு. ‘அவரு எவ்ளோ பெரிய ஸ்டாரா இருந்தாலும் யோசிக்கிறாரு பாருங்க. இன்னும் போகணும்னு கூட யோசிக்கிறாரு. அந்த மனசுக்கு தான் இன்னைக்கு வரைக்கும் அவரு சூப்பர்ஸ்டார்’ என்கிறார் ராமராஜன்.

Ramarajan

Ramarajan

கோபம் இருக்குற இடத்துல தான் குணம் இருக்கும். இளையராஜாவுக்கு எனக்கு பாட்டு போட முடியலயேன்னு வருத்தம் தான். அடுத்து 6 சிட்டியுவேஷனக் கொண்டு வா. பிரமாதமா பண்ணுவோம்னு சொன்னார் இளையராஜா. அவரைப் பார்த்த வரை அந்த ஆர்மோனியம் தான் உலகம். நான் சொன்னேன். ‘உங்க தம்பி கங்கை அமரன். அவரு தம்பி நான். அதனால தான் ‘ராஜா ராஜா தான்’னு டைட்டிலே என் படத்துக்கு வச்சேன்’ என்கிறார் ராமராஜன்.

‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பொண்ணோ’ என்ற பாடல் ராகம் தான் ‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணைக் கேளு’ன்னு வந்தது. அவருக்குப் போட்ட பாட்டு எனக்கு வந்த மாதிரி எனக்குப் போட்ட பாட்டை அவரு பாடுனாரு. அதுதான் இறைவனோட அமைப்பு.

இதையும் படிங்க… நேராக ரிக்கார்டிங் தியேட்டருக்கே வந்து மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்! இது எப்போ நடந்தது?

அதே மாதிரி எங்க ஊரு மாப்பிள்ளை படத்துக்கு டைட்டில் சாங்காக ‘மலையாளக் கரையோரம் தமிழ்பாடும் குருவி’ என பாடல் முதல்ல எனக்குப் போட்டாரு. அண்ணே மலையாளமா… தமிழ்ப்படம்ணேன் வேண்டாம்னுட்டேன். அப்புறம் ‘வலது காலை எடுத்து வச்சி வாடா ராசா வா’ன்னு மாத்திட்டாரு. அப்புறம் அந்த மலையாளக் கரையோரம் பாட்டைத் தூக்கி ராஜாதி ராஜால போட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top