More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜி எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!.. ஒய்.ஜி.மகேந்திரன் சொன்ன சூப்பர் தகவல்..

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் செவாலியே சிவாஜி குறித்த பல சுவையான  நினைவுகளை இவ்வாறு பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

நான் சிவாஜியோடு 33 படம் நடித்து விட்டேன். இதை விட எனக்கு வேறு எந்த அவார்டும் தேவையில்லை. எனக்கு ரெண்டே ரெண்டு பேர் தான் நான் வெஜ் பழக்கம் பண்ணி விட்டார்கள். ஒன்னு சிவாஜி. இன்னொன்னு கமல். சூட்டிங் சமயத்தில் சிவாஜி வீட்டுல இருந்து சாப்பாடு வரும். ஆனால் அவரு வெளியில சொல்லிக்கிறது இல்ல.

Advertising
Advertising

இதையும் படிங்க… அஜித்துக்காக 10 வருஷமாக பொத்தி வைத்த டைட்டில்… அருண்விஜய்க்கு தூக்கி கொடுத்த இயக்குனர்…

உருவங்கள் மாறலாம் படத்தில் எல்லாரும் வருவாங்க. அதுல சிவாஜி தான் கடவுள். இவருக்கு ஒரே ஒரு நாள் தான் சூட்டிங். எஸ்.வி.ரமணன் இயக்குனர். கதை வசனம் எழுதியவர் ராம்ஜி. அவர் கே.சுப்பிரமணியம் பேமிலி. ஒருநாள் எங்கிட்ட வந்து சிவாஜி, டேய் இன்னைக்கு வந்து இந்த யூனிட்ல இருக்குற அத்தனை பேருக்கும் என்னோட சாப்பாடுடான்னு சொன்னாரு. கிட்டத்தட்ட 150 பேரு இருந்திருப்போம்.

என்ன சார் திடீர்னு இப்படி சொல்றீங்க…? தெரியாது மகேந்திரா. இந்த கே.சுப்பிரமணியன் வீட்டுல நாங்கள்லாம் பசிக்கும்போது எத்தனையோ தடவை உட்கார்ந்து சாப்பிட்டுருக்கோம் தெரியுமா? அப்படி சாப்பாடு போட்டவருடா இவங்க அப்பா. எனக்கு எப்படி அந்த நன்றிக்கடனை திருப்பி சொல்றதுன்னு தெரியல.

ஏதோ என் மனசுல இவங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டா அதுல கொஞ்சம் மனநிறைவுன்னாரு. ஒரு சாதாரண மனுஷனோட மனசுல என்ன ஆசாபாசம் உண்டோ, அதெல்லாம் அவரிடம் உண்டு.

இதையும் படிங்க… ரீ-ரிலீஸில் அதிக வசூலை அள்ளிய டாப் 5 திரைப்படங்கள்!.. சொல்லி அடித்த கில்லி!…

ஒண்ணே ஒண்ணு தான் அவரோட குறிக்கோள். இந்த கேமரா ஆன் ஆயிடுச்சுன்னா மக்களைக் கவரணும். அவ்வளவு தான். அவர் மத்தவங்களுக்கு நிறைய உதவி பண்ணிருக்கார். ஆனால் அதை சொல்லிக்கிறது இல்ல. சிவாஜி அரசியலுக்கு வர வேண்டாம்னு அப்பவே சொன்னேன்.

ஏன்னா அவரு எல்லாருக்கும் சொந்தம். எம்ஜிஆரே அவரோட மிகப்பெரிய ரசிகர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சிவாஜி எனக்கு வைத்த செல்லப்பெயர் பரதேசி. வாடா பரதேசின்னு கூப்பிட்டார்னா அன்பா இருக்காருன்னு அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts