சமூக வலைதளங்களில் ஒரே பரபரப்பாக பேசப்படும் செய்தி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பார்வதியையும் கம்ருதீனையும் பற்றித்தான். 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக வாட்டர்லெமன் திவாகர் மற்றும் அரோரா உள்ளே வந்தது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.
ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரஜின் , சாண்ட்ரா, அமித், திவ்யா எப்போது வீட்டிற்குள் நுழைந்தார்களோ அப்போதே நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு தம்பதி உள்ளே போனது இந்த சீசனில்தான். அதனால்தான் கணவன் மனைவிக்குள் கண்டிப்பாக பிரச்சினை வரும் என அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு ட்விஸ்ட்டாக பிரஜினை வெளியேற்றியது பிக்பாஸ் வீடு.
ஏனெனில் சாண்ட்ரா இல்லாமல் பிரஜினால் இருக்க முடியும். ஆனால் பிரஜின் இல்லாமல் சாண்ட்ராவால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாது. அதனால் சாண்ட்ரா இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பார் என்பதானலேயே பிரஜினை வெளியேற்றினார்கள். இப்படி பல யுத்திகளை பிக்பாஸ் நிர்வாகம் கையாண்டது. ஆனால் இதற்கிடையில் பார்வதி மற்றும் கம்ருதீனின் லீலைகளும் அவ்வப்போது அரங்கேறியது.
அதை பிக்பாஸ் நிர்வாகமோ விஜய்சேதுபதியோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என மக்கள் கொதித்தனர். வார இறுதியில் விஜய்சேதுபதி பார்வதியையும் கம்ருதீனையும் எச்சரித்து விட்டு மட்டும் சென்றார். ஆனால் இருவரும் தொடர்ந்து அவர்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று பார்வதிக்கும் கம்ருதீனுக்கும் விஜய்சேதுபதி ரெட் கார்டு கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இதில் ஏகப்பட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் குதித்தனர். ஆனால் வாட்டர்லெமன் திவாகர் மட்டும் பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்தது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என பேசியிருக்கிறார். மதுரையை சேர்ந்த பெண் பார்வதி. பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்ட்ரா அக்கா கோபத்தை தூண்டுகிறார். பார்வதியை பொறுத்தவரைக்கும் யார் கோவத்தை தூண்டினாலும் ஒரு லெவலுக்கு மேல பொங்கிருவாங்க.

விளையாட்டை பொறுத்தவரைக்கும் தள்ளி விடுவது என்பது இயல்பு. அதனால் இதை ஒரு விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். சாண்ட்ரா அக்கா ஒரு காலத்தில் பார்வதியை பயன்படுத்தினார்கள். நிறைய வார்த்தைகளை சாண்ட்ரா அக்காவும் பேசியிருக்கிறார். கடைசில பார்வதி முதுகில் சாண்ட்ரா அக்கா குத்திட்டாங்கனுதான் நான் பார்க்கிறேன்.
