விஜய் ,அஜித் படங்கள்னாலே இந்த பிரச்சினை கண்டிப்பா இருக்கு!.. அனுபவத்தை பகிர்ந்த எச்.வினோத்..

by Rohini |
ajith
X

aajith vijay

துணிவு படம் ரிலீஸாக இருக்க இன்னும் சில தினங்களே இருக்க படத்தை பற்றிய அனுபவத்தை பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார் எச்.வினோத். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துணிவு திரைப்படம் முழு ஆக்‌ஷன் படமாக அமைந்திருக்கிறது.

படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும் பல விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது துணிவு படத்தின் டிரெய்லர். இதற்கு முன் வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் இல்லாத அளவுக்கு அஜித் இந்த படத்தில் மிகவும் ஜாலியாக காணப்படுகிறார்.

ajith1

ajith vijay

இதற்கு காரணம் என்ன? ஏன் இந்த விமர்சனங்கள் வருகிறது? என்ன வகையான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று வினோத் முதன் முதலாக வாய் திறந்திருக்கிறார். முதலில் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும். அவர்களுக்கு என்ன மாதிரியான வகையில் அஜித்தை காண்பிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : ரமணாவின் கதை திருட்டில் மாட்டிக் கொண்டு முழித்த கேப்டன்!.. இயக்குனரை சமாளிக்க அவர் கையாண்ட புது யுத்தி!..

வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் ஒரு போலீஸ் அதிகாரியாக தன் மூத்த அதிகாரியிடம் தன் விளையாட்டு தனத்தையோ அல்லது கெத்தையோ காட்ட முடியாது, அதே மாதிரி ஒரு வக்கீலாக ஒரு நீதிபதியிடமும் தன் மாஸை காட்டமுடியாது. இதெல்லாம் கதையை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது.

ajith2

h.viinoth

ஆனால் இந்த படம் முழுக்க அஜித் ஓவர் கம் பண்ற மாதிரியான கதை. அதனால் தான் பார்ப்பதற்கு மிகவும் ஜாலியாக டான்ஸ் ஆடியும் பாட்டு பாடியும் துப்பாக்கி வைத்து காணப்படுவார். மேலும் அஜித் படத்திற்க்கு மட்டுமில்லாமல் விஜய் படத்திற்கும் நாங்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினை என்னவென்றால் கதைக்கு ஏற்ற வகையில் ரியல் லொக்கேஷனை எங்களால் தேர்வு செய்யமுடியவில்லை.

சில காட்சிகளுக்கு செட் போட்டு விடலாம். ஆனால் ஒரு மருத்துவமனையோ அல்லது கல்லூரியோ தேர்வு செய்யும் போது அரசிடம் அனுமதி பெற்றாலும் விஜய் அஜித் போன்ற நடிகர்கள் உள்ளே வரும் போது அங்கு என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. விபரீதமாக எது நடந்தாலும் அது அரசுக்கு ஒரு கெட்டப்பெயராக மாறிவிடும். அதனால் இது ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்று எச்.வினோத் கூறினார். இதே பிரச்சினையை தான் வருகிற 11 ஆம் தேதியும் எல்லா திரையரங்குகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

Next Story