சிவகார்த்திகேயன் ஹீரோவானதே எங்களால தான்!...வளர்ந்துட்டா மறந்துருவாங்க!..புலம்பும் பிரபலம்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த ஸ்கிர்ப்டை வைத்துக் கொண்டு பொழப்பை நடத்திக் கொண்டிருந்தவர் திடீரென வெள்ளித்திரையில் நுழைந்தார்.
தனுஷின் மனம்
அதுவும் நடிகர் தனுஷ் ஒரு பிரபல இயக்குனரிடம் ஏதாவது காமெடி கதை இருந்தால் சொல்லுங்க, சிவகார்த்திகேயன் என்ற பையனுக்கு என்று சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் முயற்சி செய்த செய்திகள் எல்லாம் வெளிவந்தன. தனுஷுடன் மூணு என்ற படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க : ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போன விஜய் பட ஷூட்டிங்… தடைகளை தாண்டி ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
அதன் பின் ஹீரோவாக மெரினா படத்தில் முதன் முதலில் நடித்தார். ஏற்கெனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரையில் பார்த்ததும் ரசிகர்களுக்கு எல்லையில்லா சந்தோஷம். அதன் பின் கொஞ்ச நாள் படம் ஏதுமில்லாமல் இருந்த சிவகார்த்திகேயனின் டிவி நிகழ்ச்சியை பாடலாசிரியர் யுகபாரதி இசையமைப்பாளர் இமானும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கை கொடுத்த தொலைக்காட்சி
அப்போது சிவகார்த்திகேயனை பார்த்து மெரீனா படத்தை பார்த்து பேசிக்கொண்டு சினிமாவில் இன்னும் இவர் நடிக்கலாம் என்பது மாதிரி பேசிக்கொண்டு இருந்தார்களாம். அந்த நேரத்தில் இயக்குனர் எழில் அங்கு வந்தாராம். அவர் ஏதோ ஒரு கதையை இவர்களிடம் கூறியிருக்கிறார். அந்தக் கதையை கேட்டதும் இந்த கதைக்கு சிவகார்த்திகேயன் என்ற பையன போடுங்க.
இதையும் படிங்க : ரஜினி எல்லாம் பெரிய ஹீரோவா?.. அவங்க தான் ஹீரோ!.. பளிச்சுனு வெளிப்படையா சொன்ன திருப்பூர் சுப்பிரமணியன்!..
மெரீனா படத்துல நல்லா நடிச்சிருக்காரு என்று சொன்னதுக்கு அப்புறம் தான் ‘மனங்கொத்தி பறவை’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஹிரோவாக நடித்தார். அந்த படத்தில் அவர் நடிக்கிறதுக்கு நாங்க தான் காரணம். இது சிவகார்த்திகேயனுக்கே தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. என்று பாடலாசிரியர் யுக பாரதி கூறினார்.
ஆக்ஷன் ஹீரோ
மேலும் சினிமாவில் நுழைவதற்கே ஒரு விதத்தில் தனுஷ் காரணமாக இருந்திருக்கிறார். முன்பெல்லாம் சினிமா விழாக்கள் என்றால் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை.இவர்களுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று பல வதந்திகள் வந்து கொண்டிருந்தன.
மேலும் ஏற்றிவிட்ட ஏணியை மறந்தவர் சிவகார்த்திகேயன் என்றெல்லாம் பல செய்திகள் வைரலானது. இப்பொழுது சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்ஷன் ஹீரோவாக வளரும் சிவகார்த்திகேயன் பழசையும் மறக்காம இருந்தால் நன்றாக இருக்கும்.