Connect with us

படத்தைப் பார்த்தாவது ராமாயணம் அறியலாமே..!

samboor

latest news

படத்தைப் பார்த்தாவது ராமாயணம் அறியலாமே..!

samboor

ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் நம் நாட்டின் இருபெரும் இதிகாசங்கள். இவற்றில் ராமாயணக் கதையை கேள்விப்படாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவு பிரபலமானது.

அப்படிப்பட்ட கதையை திரைப்படமாக எடுத்தால் யார் தான் பார்க்காமல் இருப்பார்கள்? இதனால் தான் மகாபாரதக் கதையை விட ராமாயணக் கதை பிரபலமானது.

படத்தின் பெயர் சம்பூர்ண இராமாயணம். 1958ல் வெளியானது. கே.சோமு இயக்கினார். ஏ.பி.நாகராஜன் கதை எழுத எம்.ஏ.வேணு தயாரித்தார். இசை கே.வி.மகாதேவன்.

samrrre

வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டது. சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ் கதையின் பிரதானமான வேடத்தில் நடித்திருந்தனர்.

கே.வி.சீனிவாசன் தான் என்.டி.ராமராவுக்கு தமிழில் குரல் கொடுத்தவர். இதே படம் 1959ல் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டது.

படத்தின் கதையானது ராமனின் பிறப்பிலிருந்து விலாவரியாக விவரிக்கிறது.

பரதனின் தாய் சூழ்ச்சி செய்கிறாள். இதனால் ராமரின் முடிசூட்டு விழா தடைபடுகிறது. அவருக்கோ 14 ஆண்டுகள் வனவாசம் என்று கெடு விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறான் பரதன். ஒரு கட்டத்தில் தாய் கூறும்போது தான் அவனுக்குத் தெரிகிறருது.

பின்னர் அவரை அவதூறாகப் பேசி விட்டு ராமரை நோக்கி ஓடுகிறான். அங்கு தனக்கு சேவையாற்ற வந்த பரதனைப் பாராட்டுகிறார் இராமர். இறுதியில் இலங்கை யுத்தமும், இராவணனை வதம் செய்யும் காட்சியும் வருகிறது. இத்துடன் படக்கதை முடிவடைகிறது.

saeeee

படத்தில் பரதனாக சிவாஜி கணேசனும், ராமராக என்.டி.ராமராவும், சீதையாக பத்மினியும், இலட்சுமணனாக பி.வி.நரசிம்மபாரதியும், இராவணனாக டி.கே.பகவதியும், தசரதனாக சித்தூர் வி.நாகையாவும், கோசலையாக எஸ்.டி.சுப்புலட்சுமியும், கைகேயியாக ஜி.வரலட்சுமியும், குகனாக வி.கே.ராமசாமியும், சூர்ப்பனகையாக எம்.என்.ராஜமும், மண்டோதரியாக சந்தியாவும் வாழ்ந்துள்ளனர். இவர்களது நடிப்பும், படத்தின் செட்டிங்கும் நம்மை ராமாயண காலகட்டத்திற்கேக் கொண்டு சென்று விடுகின்றன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இதிகாசமா என பெருமூச்சு விட வைக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் செம மாஸாக உள்ளது.

asdwerwr

படத்தை இதுவரை பார்க்காதவர்கள் கட்டாயமாக நெட்டிலிருந்து டவுன்லோடு செய்தாவது பார்த்து விடுங்கள். நம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இதிகாசம் இது. படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஏ.மருதகாசி எழுதியுள்ளார்.

சங்கீத சௌபாக்யமே, இன்று போய் நாளை, தவமாமுனி விஸ்வாமித்திரன், நீதி தவறாது, அன்னையும் பிதாவுமாகி, பாதுகையே துணையாகும், தென்னாட்டுடைய (கண் பாடும்), சபரிக்கு ராமனும், வீணை கொடையுடைய ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top