வருங்காலத்துக்கு வாங்க… ஓவர் குஷி மோடில் இருக்கும் வெங்கட் பிரபு! என்ன வரிசையா அப்டேட் விடுறாரு!

by Akhilan |
வருங்காலத்துக்கு வாங்க… ஓவர் குஷி மோடில் இருக்கும் வெங்கட் பிரபு! என்ன வரிசையா அப்டேட் விடுறாரு!
X

விஜயின் லியோ படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் துவங்கி விட்டது. இப்படத்தின் சமயத்திலேயே தன்னுடைய 68வது படத்தின் வேலைகளிலும் விஜய் தற்போது பிஸியாகி விட்டார். அப்படத்தின் வேலைகளும் பரபரப்பாக தொடங்கி விட்டது.

வெங்கட் பிரபு தன்னுடைய மங்காத்தா படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடைவேளை எந்த படங்களும் பெரிய ஹிட் கொடுக்காமல் இருந்து வந்தார். அவருக்கும் சிம்புவுக்குமே ப்ரேக்காக இருந்தது தான் மாநாடு படம். இப்படத்தின் கதை வேறு விதமாக அமைந்தது. டைம் லூப் கதையே கோலிவுட்டில் அது தான் முதல்முறை என்பதால் சூப்பர்ஹிட்டானது.

இதையும் படிங்க : வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்

இதை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு தன்னுடைய 68வது படத்தினை இயக்க வாய்ப்பு கொடுத்தார். இதனால் ரொம்பவே விளையாட்டுதனமாக இருக்கும் வெங்கட் டீமே தற்போது சிரீயஸாக படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். கல்பாத்தி அர்ச்சனாவுடன் படக்குழு தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் மையம் கொண்டு இருக்கின்றனர். அங்கு விஜயுடன் இக்குவலைசர் படம் பார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தளபதி68 படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றதாம். அதில் விஜயை வைத்து செய்த டெஸ்ட் ஷூட் படங்களும் இணையத்தில் ரிலீஸ் செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க : தியேட்டரில் அலப்பறை கொடுத்த விஜய்… அதுவும் இவர் படத்துக்கா? வைரலாகும் புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

வருங்காலத்துக்கு வாங்க என கேப்ஷன் போட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்தினை பார்த்து விஜய் ரசிகர்கள் வாவ் சொல்ல தொடங்கி இருக்கின்றனர். இப்போது இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஸ்லிம் லுக்கில் இருக்கும் விஜய் போஸையும் இணைத்து வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. என்ன லுக்கா இருக்கும் என இப்போதே விஜய் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

Next Story