சூர்யா படங்களின் தொடர்தோல்விக்கு என்ன காரணம்..? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

Published on: November 26, 2024
surya
---Advertisement---

சூர்யாவின் படங்கள் கடந்த 11 வருடங்களாகவே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. சிங்கம் 2 படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான அவரது படங்களின் கதை சரிவர அமையவில்லை. அதனால் தானோ என்னவோ அவரது படங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை.

Also read: ரஜினி டான்ஸ் ஆடுனது பிடிக்கல! பொறாமை இருக்க வேண்டியதுதான்.. அதுக்கு பார்த்திபன் இப்படியா?

அதே போல சமீபத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாகத் தயாரான கங்குவா படமும் பெரிய ஹைப் கொடுத்த போதும் படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. நெகடிவ் விமர்சனங்களையே சந்தித்தது. இதற்காக பலரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து நின்றார்கள்.

குறிப்பாக சூர்யாவின் மனைவி ஜோதிகா படத்தில் நல்ல விஷயமே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்றார். அதே போல தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை விட்டது. திருப்பூர் சுப்பிரமணியன் சொல்லும் போது படத்திற்கு யூடியூபர்கள் எப்டிஎப்எஸ் பார்த்து ரிவியு கொடுக்கக்கூடாது. ஒரு வாரம் கழித்துத் தான் ரிவியு கொடுக்க வேண்டும்.

தியேட்டர் பக்கமே வரக்கூடாது என்று கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கும் யூடியூபர்கள், விமர்சகர்கள் கண்டனப்பதிவுகளைப் போட்டு இருந்தனர். இந்த நிலையில் வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். என்னன்னு பாருங்க.

kanguva
kanguva

சூர்யா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல தேர்ந்தெடுத்து நடிக்கிறாரு. அதுல தப்பு எதுவும் இல்லை. ஆனா சைடுல ஜாலியான படங்களைக் கொடுத்துட்டு எப்பவாவது இதுபோன்ற வித்தியாசமான ரோலை எடுத்துப் பண்ணினா அதுவே அவரைப் பயங்கரமா சக்சஸ் ஆக்குறதுக்குக் காரணமா இருக்கும்னு நான் நினைக்கிறேன். இதைப் பற்றி உங்களோட கருத்து என்ன? அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

Also read: இளையராஜாவின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ஒரே பாடல் இதுதான்..! அப்புறம் என்னாச்சு?

மாறுபட்ட கதாபாத்திரமோ ஜாலியான கதாபாத்திரமோ அந்தக் கதாபாத்திரத்தை ஈர்க்கின்ற திரைக்கதை இருக்கிறதே. அது ரசிகர்களைக் கவரும் விதத்தில் அமையணும். அப்போது தான் படங்கள் வெற்றி அடையும். அது சமீபகாலமாக சூர்யா படத்திலே நிகழவில்லை என்றார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.