தனுஷுக்கு சிம்பு எவ்வளவோ மேல்!.. இப்படியெல்லாம் அவர் பண்ணது இல்ல!.. விஷயம் இதுதான்!..
சிம்புவும், தனுஷூம் சமகால நடிகர்கள். ஆனால் தனுஷ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி ஒரு நல்ல நிலையை எட்டிவிட்டார். ஆனால் சிம்புவோ பல காதல் தோல்விகளை சந்தித்து ரொம்பவே துவண்டு போனவர். இப்போது விட்ட இடத்தைப் பிடிக்கும் வகையில் கடினமாக உழைத்து வருகிறார்.
மாநாடு வெற்றிக்குப் பிறகு அவர் கதை தேர்வு உள்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்து வரும் தக் லைஃப் படத்திற்குப் பிறகு அவரது கால்ஷீட்டுக்கு எல்லாரும் வரிசையில் தான் நிற்க வேண்டி வருமாம்.
சிம்புவுக்கு ரெட்கார்டு கொடுக்கும்போத அவரோட மனநிலை எப்படி இருந்ததுன்னு பிரபல பத்திரிகையாளர் சேகுவாராவிடம் யூடியூப் சேனல் ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
எல்லா ரெட்கார்டையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது. அவர் அட்வான்ஸ் வாங்கிட்டு வராம இருந்தாருன்னு சொல்ல முடியாது. குறித்த நேரத்துக்கு வேணா வராம இருக்கலாம். இதுவெல்லாம் நடந்துருக்கும். சிம்புவைப் பொருத்தவரை அவர் படங்களில் பணத்தை வாங்கிக் கொண்டு யாரையும் பணமோசடிங்கற பேருல ஏமாற்றியது கிடையாது.
ஆனா அவர் குறித்த நேரத்துக்குப் போக மாட்டாரு. சூட்டிங் எல்லாம் கேன்சல் ஆயிடும். அது புரொடியூசருக்குப் பாதிக்கும். அந்த மாதிரி சிக்கல்கள் தான் வந்துருக்கு. ஆனா நாலு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக்கிட்டு அவரோட சொந்தத் தயாரிப்புல போட்டு படத்தை எடுத்தா தப்பு. அதைத் தான் இன்;னைக்கு பல பேர் பண்றாங்க. தனுஷ் பண்ணது அதுதான். அட்வான்ஸ் வாங்கினா அடுத்த படத்துல நடிச்சிக் கொடுக்கணும்.
இல்லன்னா அதுக்குப் பதில் சொல்லணும். விஷால் இருக்காரு. அவர் அட்வான்ஸ் வாங்கிட்டு படத்துல நடிக்காம விஷால் புரொடக்ஷன்னு வச்சிக்கிட்டு நடிச்சாருன்னா அவன் என்ன இளிச்சவாயனா? அவன் என்ன தலையில துண்டா போட்டுக்குவான்? வாக்குறுதி கொடுத்தா தயாரிப்பாளர் சங்கம் கூட சாதாரணமாகத் தான் சொல்லுது. நீங்க படத்துல நடிச்சிக் கொடுத்துட்டு அடுத்த படத்துக்குப் போங்க.
இல்லன்னா ஒரு டிஸ்கஷனுக்கு வந்துட்டு அடுத்தப் படத்துக்குப் போங்கன்னு தான் சொல்றாங்க. ரொம்ப கட் அண்ட் ரைட்டாலாம் சொல்லல. இப்போ சிம்பு எல்லா விஷயத்துலயும் மாறி குறித்த நேரத்துக்குப் போறாரு. மாநாடு படத்துல கூட அப்படித்தான் கரெக்டா வந்தாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.