பாதி நடித்து விட்டு வேறு படத்திற்கு தாவிய ஜெயலலிதா... காத்திருந்து படம் எடுத்த இயக்குனர்

by sankaran v |
பாதி நடித்து விட்டு வேறு படத்திற்கு தாவிய ஜெயலலிதா... காத்திருந்து படம் எடுத்த இயக்குனர்
X

Jayalalitha

1965ல் வெளியான வெண்ணிற ஆடை படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல். ஸ்ரீதர் இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த படம். ஜெயலலிதா அறிமுகம். ஸ்ரீகாந்த்துடன் ஜோடி சேர்ந்தார். படத்தில் நிர்மலாவும், மூர்த்தியும் அறிமுகமானார்கள். இவர்களுக்கு இது முதல் படம் என்றதால் படத்தின் பெயரையே தன் அடைமொழியாக வைத்துக் கொண்டனர்.

Director Sridhar

இந்தப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடிக்க வந்த விதம் சுவாரசியமானது. இயக்குனர் ஸ்ரீதரின் முக்கியமான உதவியாளரான என்.ஜே.சக்கரவர்த்தி தான் மூர்த்தியை அறிமுகப்படுத்தினார். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்களே?

எப்படி காமெடி வேடத்தில் நடிப்பீர்கள் என்று கேட்டார் ஸ்ரீதர். என்னுடைய அழகான முகமே நடிக்கிறதுக்கு எதிரியாயிடுச்சான்னு மூர்த்தி சொல்லவும் அந்தப் பதில் ஸ்ரீதரைக் கவர்ந்தது. அதைக் கேட்டதுமே அந்தப் படத்தில் இவர் தான் நகைச்சுவை நடிகர் என முடிவு செய்தார் ஸ்ரீதர்.

VA2

அந்தப்படத்தில் எல்லாருமே புதுமுகம் என்பதால் குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டு இருந்தார் ஸ்ரீதர். முதல் கட்டப்படப்பிடிப்பு திட்டமிட்டது போல சரியாக நடந்தது. ஆனால் அதற்கடுத்தபடியாக படப்பிடிப்பைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்க டைரக்டர் பி.ஆர்.பந்துலு ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்தார்.

அதனால் அந்தப் படத்திற்கு முன்னுரிமை கொடுத்து அந்தப் படத்திற்குச் சென்றுவிட்டார் ஜெயலலிதா. இதே இடத்தில் வேறு ஒரு நடிகையாக இருந்தால் ஸ்ரீதர் நிச்சயமாக அவரை மாற்றியிருப்பார். ஆனால் வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவின் நடிப்பு அந்தப் பாத்திரத்திற்குக் கனகச்சிதமாகப் பொருந்தியதால் அவருக்காகக் காத்திருந்து படத்தை எடுத்து முடித்தார்.

Next Story