என்னது மாநகரம் ஸ்ரீ பெண்ணா மாறிட்டானா? என்னதான் ஆச்சு..? தோழி சொன்ன உண்மை தகவல்

managaram shri
மாநகரம் படத்தில் நடித்தவர் நடிகர் ஸ்ரீ. இவர் ஒரு சில படங்களில் நடித்து விட்டு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். வீடியோவைப் போட்டு அவ்வப்போது பிரபலமானார். இப்போது அவர் போட்ட அரை நிர்வாண வீடியோ செம வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவரது தோழி டோட்டி டேவிட் என்ன சொல்கிறார்னு பாருங்க.
ஸ்ரீ என்னோட நீண்ட நாள் நண்பர். அவர் ஆர்டிஸ்டா ஆகறதுக்கு முன்னாடி முதல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட். கலக்கப்போறது யாருல பங்கேற்றார். சிவகார்த்திகேயன் எல்லாரும் இருந்த சீசன்ல நானும் அவரும் சேர்ந்து பண்ணினோம். அப்பவே சூப்பரா மிமிக்ரி பண்ணுவாரு. அவர் ரொம்ப திறமையானவர். அவன் இருந்தாலே அந்த இடம் கலகலப்பா இருக்கும். வாய்விட்டுச் சிரிக்கக்கூடியவன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துல நடிச்சான். அதுக்கு அப்புறம்தான் அவன் கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தான். முதல்ல எல்லாரும் சேர்ந்து வெளியே போவோம். வருவோம். அப்புறம் வர்றதை நிறுத்திக்கிட்டான். சரி அவன் ஆக்டரா ஆகிட்டான். செலபிரிட்டிங்கறதால வரல போலன்னு நினைச்சோம். ஆனா வீட்டுக்கு வருவான். நாங்க அதை சாதாரணமாகத் தான் நினைச்சோம்.
அவன் பேசலன்னு நாங்க கோபப்பட மாட்டோம். பிக்பாஸ்ல கூட மைன்ட் லெவல்ல ஒரு மாதிரியா ஆகி வெளியே வந்துட்டான். அதுக்கு அப்புறம் அவனுக்கு என்னதான் நடக்குது? திடீர்னு மனசு சரியில்லன்னு சொல்றாங்களேன்னு பார்த்தேன். அவனைக் கான்டாக்ட் பண்ணவே முடியலை. அவன் டிப்ரஷனுக்கு மருந்து சாப்பிடுறதாக எனக்கு என் தோழி மூலமா தகவல் கிடைச்சது. அது கொஞ்சம் அதிகமான டிப்ரஷன். மென்டலியா ரொம்பவே பாதிச்சது. அவனுடைய ஒவ்வொரு படமுமே பேசக்கூடிய படம்தான்.
வழக்கு எண் 18/9 படத்துல அருமையா நடிச்சிருப்பான். ஆனா அவன் டைரக்டர் ஆகத் தான் விரும்பினான். மாநகரம் படத்துக்கு அப்புறம் அவன் ஸ்கிரிப்டை ரெடி பண்ணிட்டான். ஆனா இடையில எங்களுக்கு போன் பண்ணிட்டு வேலை வாங்கிக் கொடுன்னு கேட்டான். புக் கவருக்கு டிசைன் பண்ற மாதிரி எல்லாம் கேட்டான். அவனுக்கு நாம அட்வைஸ் பண்ணினா காணாமப் போயிடுவான்.
வில் அம்புன்னு ஒரு படத்துல தயாரிப்பாளர் சொன்னது என்னன்னா ஸ்ரீக்கு பேமெண்ட் தரல. பிக்பாஸ்லயும் கொடுக்கல. ஸ்ரீக்கு பொட்டன்ஷியன் நிறுவனத்துக்கு வர்ற ஸ்கிரிப்டைப் படிச்சிப் பார்த்துட்டு இது தேறும் தேறாதுன்னு செலக்ட் பண்ணுவான். 40 ஆயிரம் சம்பளம் கொடுத்தாங்களாம். மாநகரம் படத்துல நடிச்சதுல இருந்தே அவன் ஸ்கிரிப்ட் ரிவியூவர்தான் என்கிறார் டோட்டி.
ஒரு கட்டத்துல பொங்கல் கிண்டுன ஸ்ரீயை யாரும் கண்டுக்கல. இன்னைக்கு சட்டையைக் கழட்டி ஆபாசமா இருக்கான்னதும் மட்டும் காட்டுறாங்க. நம்ம அக்லி சைடைத்தான் பார்க்குறோமா? ஏன் அப்பவே அவனை புரொமோட் பண்ணிருக்கலாமே… இன்னைக்கு நல்ல ஆக்டர்னு சொல்றோம். ஆனா அவன் ஒரு வருஷமா கண்டுக்காம இருந்துருக்கான். அவன் போட் போஸ்ட்டுக்கு வேல்யு இல்லாம இருந்துருக்கு.
மாநகரத்துல நடிச்சவரு பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்காருன்னு சொல்லிருக்கலாமே. அப்பவே மிஷ்கினையும், லோகேஷையும் காப்பாத்துங்கன்னு கேட்டுருக்கலாமே. இன்னைக்கு அவன் நிலைமை இந்த அளவுக்கு மோசமானதுக்கு அப்புறம் மட்டும் ஏன் வெளியே வருது? இதுதான் மனிதாபிமானமா? என கொதிக்கிறார் தோழி டோட்டி.
மாநகரம் ஸ்ரீயின் ஆபாச வீடியோவைப் பார்க்கும்போது இதென்ன பெண் மாதிரி நீளமான தலைமுடி, முக அமைப்புன்னு அச்சு அசல் பெண் மாதிரியே இருக்காரே… ஒருவேளை அப்படியே மாறிட்டாரோ என்றெல்லாம் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ஸ்ரீயின் தோழி பேட்டி கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.