ஃபீல் குட் படங்கள்னா என்ன? டூரிஸ்ட் ஃபேமிலியோட ஸ்பெஷல் இதுதானா?

by sankaran v |   ( Updated:2025-05-04 23:48:41  )
tourist family
X

tourist family

Tourist family: அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் டூரிஸ்ட் ஃபேம்லி. இந்தப் படத்தைப் பற்றி பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பாருங்க.

சமீபகாலமாக ஃபீல் குட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் குட்நைட், லவ்வர்ஸ் படங்களைத் தந்த மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டூரிஸ்ட் ஃபேம்லி படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. திரையிட்ட இடங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் தான். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பல தியேட்டர்களில் படம் முடிந்து ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். இந்தப் படம் சின்ன பட்ஜெட். ஆனாலும் பெரிய பட்ஜெட் படத்துடன் சேர்ந்து ரிலீஸ் பண்ணியிருப்பதற்கு ரொம்ப ரிஸ்க் வேணும். அதற்கு காரணம் கதை மேல் படக்குழுவிற்கு உள்ள நம்பிக்கை தான். பொதுவாக கமர்ஷியலா மாஸ் ஹிட் படம் கொடுத்து நிறைய கோடி கோடியா சம்பாதிக்கணும்னு தான் இளம் இயக்குனர்கள் நினைப்பாங்க.

valaipechu bismi
valaipechu bismi

ஆனால் இந்தப் படத்து இயக்குனர் கதையை வைத்தே நாம் பயணிக்க வேண்டும். மக்களுக்கு நல்ல ஒரு ஃபீல் குட் படத்தைக் கொடுக்கணும்னு நினைச்சி எடுத்துருக்காரு. அதுக்கு சசிக்குமார், சிம்ரனைத் தேர்வு செய்து இருப்பதைப் பாராட்டலாம். என்னைக்குமே கதையை நம்பியோர் கைவிடப்படார்னு சொல்லலாம். நல்ல கதையை நம்பினா என்னைக்கும் மக்கள் கைவிட மாட்டார்கள்.

கதையை நம்பி அதுக்கு என்னென்ன தேவையோ அது கூடவே டிராவல் பண்ணினா மக்கள் நிச்யமாக ரசிப்பார்கள். மலையாளப் படங்களை எல்லாம் பார்த்தால் அது மனசுக்கு நெருக்கமாக இருக்கும். காரணம் வாழ்வியலைப் பற்றி சொல்லி இருப்பார்கள். கிட்டத்தட்ட டூரிஸ்ட் ஃபேம்லியும் அந்த ரகம்தான். படத்துல எங்கேயுமே சமரசம் இருக்காது. அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அந்தப் படத்தை இயக்குனர் பண்ணியிருக்கிறார். அதுக்குக் காரணம் கதை மேல் உள்ள நம்பிக்கையும், உழைப்பும்தான் என்கிறார் பிஸ்மி.

Next Story