பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல் என பெரிய டீமோடு இந்த மாதம் 27ம் தேதி களம் இறங்குகிறது கல்கி 2898 AD படம். இந்தப் படத்துக்கு டிரெய்லர் பரவலான வரவேற்பைப் பெற்றது. கலவையான விமர்சனமும் கிடைச்சது. என்னடா இது ஒண்ணுமே புரியலன்னும் சிலர் சொன்னாங்க. அவங்களுக்குப் பதில் சொல்லி இருக்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
கல்கி படத்தோட டிரெய்லர் ரிலீஸாகி இருக்கு. பாகுபலிக்கு அப்புறம் பிரபாஸ்சுக்கு கைகொடுக்கல. கமல் இந்தப் படத்துக்கு 3 நாள் தான் கால்ஷீட்டே கொடுத்து இருந்தாரு. பாகுபலி படம் வந்ததில் இருந்தே பிரபாஸ் முக்கியமான நடிகரா மாறிட்டாரு. பான் இண்டியா ஆக்டரும் கூட.
இந்தப் படத்தோட டிரெய்லர் பார்க்கும்போது பலருக்கும் புரியாத புதிராக இருக்கு. இதை எப்படி கதையா சொல்லி புரிய வைக்கப் போறாங்கன்னு யோசனை எல்லாம் வந்தது. ஒரு சிலர் படம் சூப்பரா ஓடும். டிரெய்லர் நல்லாருக்குன்னு சொல்றாங்க. ஆனா ஒரு சிலர் என்னங்க ஒண்ணுமே புரிய மாட்டேங்குதுன்னு சொல்றாங்க. அனா ஹைதராபாத் பக்கம் இந்தப் படத்து மேல பெரிய எதிர்பார்ப்பு வச்சிருக்காங்க.
படம் நல்லாருந்தா அதுக்கு மொழி தடையல்ல. பாகுபலி, காந்தாரா, மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு படங்கள் எல்லாம் நல்லா ஓட அதுதான் காரணம். நல்ல படங்கள் வந்தால் ரசிக்கிறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு.
இந்தப் படத்துக்கு விஎப்எக்ஸ் நல்லாருந்தா படம் எடுபடும். இது நடக்கும் காலகட்டம் 2898. ஆனா இந்தப் படத்தோட டிரெய்லர்ல டிரக்ஸ் எல்லாம் பார்த்தா ஏதோ கற்காலம் மாதிரியும், முகலாயர், இயேசு வாழ்ந்த காலம் மாதிரியும் இருக்கு. ‘ஒருவேளை வருஷம் போகப் போக நாம திரும்பவும் மாறிடுவோமா..?’ன்னும் நினைக்கத் தோணுது. இதுல 2 உலகம் வருது. ஒண்ணு. ஆறாயிரம் வருஷத்துக்கு முன்னாடி உள்ள உலகம். இன்னொரு உலகம் ஆறாயிரம் வருடத்தைத் தாண்டியது.
இதையும் படிங்க… அந்த நடிகருக்கு வில்லனா நடிக்கணும்!.. எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு ஆசையா?!..
அங்கிருந்து ஒருவன் இங்கு வருகிறான். இங்க என்ன நடக்குங்கறது தான் கதை. கமல் 19 நிமிடம் வருகிறார். ஒரு சீன் வந்தா கூட அடிச்சி காலி பண்ணிடுவாரு கமல். அந்த கட்ஸ் அவருக்கிட்ட உண்டு. மேக்கப்லாம் பார்க்கும்போது அவ்வளவு பயங்கரமா இருக்கு. அடுத்த பாகத்துல 45 நிமிடத்துக்கு வர்றாரு. அதனால அதோட லீடா கூட இந்தப் படத்துல அவரோட கேரக்டர் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…