வேண்டா வெறுப்பாய் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்.! பின்னணி என்ன.?!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தற்போது இருப்பவர் நடிகர் விஜய் தான். அவர், நடிப்பில் அடுத்தடுத்து எந்த படம் ரிலீசாகும் என ரசிகர்கள் முதல் தியேட்டர் ஓனர்கள் வரை அனைவரும் காத்திருக்கின்றனர்.
விஜய்க்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது, தன்னுடன் ஒருவர் போட்டோ எடுத்துக்கொள்ள வந்தால் வேண்டாம் என மறுக்க மாட்டார்.ஆனால் ஒரு கண்டிஷன் வைப்பாராம். அதாவது, நீங்கள் இப்போது போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் இதனை உடனே சமூக வலைதளங்களில் போட வேண்டாம் என்று சொல்லுவாராம்.
ஏன்என்றால், தற்போதைய படத்திற்கான கெட்டப் பில் இருப்பார் அல்லவா அதனால் அந்த படம் ரிலீசான பிறகு நீங்கள் அந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் போட்டுக் கொள்ளுங்கள் என கூறி விடுவாராம்.
அந்த வகையில், அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகளுக்கு திருமணம் என்பதால் அழைப்பிதழ் கொடுக்க அன்புச்செழியன் விஜய்யை சந்தித்து உள்ளாராம். அப்போது அன்புச்செழியன் விஜயுடன் போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டுள்ளார்.
உடனே முதலில் விஜய் மறுத்து விட்டு பின்னர் சரி என போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளாராம். எடுத்துக் கொண்ட பின்பு இந்தபுகைப்படத்தை தற்போது எந்த சமூக வலைதளத்திலும் பதிவிட வேண்டாம் என கூறியுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- பார்ட்-2 எடுக்கும் விஜய் சேதுபதி.! ‘இப்போயாவது அத செய்யுங்கள்’ கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்.!
அதனை ஏற்று அவர்களும் சென்று விட்டார்களாம். பொறுத்து இருந்து பார்க்கலாம் விரைவில் அந்த போட்டோ வெளியாகிறதா அல்லது விஜய் சொன்னது போல் பாதுகாக்க படுகிறதா என்பதை.