நந்தா படத்துல இருந்து அஜித் விலகக் காரணமே அவருதான்..! போட்டு உடைத்த பிரபலம்

surya, ajith
Ajith: பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் நந்தா. அதுவரை சாதாரண நடிகராக இருந்த சூர்யாவுக்குள் புது ரத்தம் பாய்ச்சியது இந்தப் படம் தான். இந்தப் படத்துக்குப் பிறகு அவரது மார்க்கெட் டாப் லெவலுக்குச் சென்றது. ஆனால் இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். ஆனால் அவர் ஏன் நடிக்கவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது நந்தா படம் அஜித் நடிக்க வேண்டியது. அது எப்படி மிஸ் ஆனது என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…
நந்தா படத்துல முதல்ல அஜித்கிட்டதான் பாலா கதை சொன்னார். அப்போ நான் பாலா சார் கூட இருந்தேன். ஆனால் ஒன் லைன் தான் சொன்னாராம். கேட்டதும் அஜித்துக்குப் பிடித்துவிட்டது. ஆனாலும் முழுக்கதையையும் கேட்க, பாலா அதைச் சொல்லவில்லையாம். அதனால் அஜித்துக்கு அடுத்த தடவையும் முழுக்கதையும் சொல்லப்படவில்லையாம்.
பாலாவோ எனக்கு நடிகர்களுக்கு முழுக் கதையையும் சொல்லிப் பழக்கமில்லை. எழுதி வச்சிருக்கேன். அதுல கூட நிறைய மாற்றுவேன். 13வது சீன் 17வது சீனா மாறும். திடீர்னு ஃபுல்லா மாத்திட்டு மறுபடியும் ஷூட் பண்ணுவேன்னு பாலா சொன்னாராம். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மரியாதை நிமித்தமாகப் படத்தில் இருந்து விலகி விட்டார் அஜித்.
அந்தப்படத்தில் அஜித் விலகியதும் சூர்யா வந்தார். அதுதான் சூர்யாவோட வளர்ச்சி. பாலா - அஜித் காம்போ இருந்துருந்தா வேற மாதிரி வந்துருக்கும். அஜித் மேலயும் தப்பு இல்ல. ஃபுல் ஸ்கிரிப்ட்டை எதிர்பார்த்தாரு. பாலாவைப் பொருத்தவரை சேது, பிதாமகன் படங்களுக்கு யாருக்கும் முழுக்கதையும் சொன்னது இல்ல. ஆனா ஹிட் கொடுத்தாரு. இவங்களுக்குள்ள புரிதல் தான் ரொம்ப முக்கியம். இரண்டு பேரும் வேற வேற ஸ்டைல்னு இருக்கும்போது ஆட்டோமேடிக்கா செட்டாகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.