விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் இவ்ளோ வசூல்? அஜித் படத்துக்கு அப்படி இல்லையே! இதுதான் காரணமா?

vijay, ajith
Vijay vs Ajith: தமிழ்த்திரை உலகில் கமல், ரஜினி இருவருக்கும் பிறகு சக போட்டியாளர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். அந்த வகையில் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தைக் கடைசி படமாக அறிவித்து விட்டார். அதன்பிறகு அரசியலில் முழுநேரமாக இறங்கப் போகிறார். இந்த நிலையில் 250 கோடி வரை சம்பளம் பெறும் விஜய் அரசியலில் இறங்குவது திரையுலகிற்கு பெரிய இழப்பு தான். அவரது படங்கள் என்றாலே வசூலிலும் கணிசமாக கல்லா கட்டி விடுகிறது.
இந்த நிலையில் அஜித் படங்களுக்கு மட்டும் ஏன் வசூல் குறைகிறது? அவரும் விஜய்க்குப் போட்டியாளர்தானே. ரசிகர்களும் அவருக்கு இணையாக இருக்கிறார்களே என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய், அஜித் இருவருமே சம அந்தஸ்து உடையவர்கள். படம் வெளியாகும்போதும் இருவருக்கும் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகிறது. இருவரது ரசிகர்களும் அதிகம்.
ஆனால் வசூலில் விஜய் படத்திற்கு முதல் நாளில் 200 கோடியை விட அதிகமாகவும் அஜித்துக்கு 80கோடியைத் தாண்டியும் என்றுதான் ரிசல்ட் வருகிறது. இது எப்படி என வலைப்பேச்சு பிஸ்மியிடம் கேள்வி கேட்க இவர் சொன்ன பதில் இதுதான். நல்ல கேள்வி.

விஜய், அஜித் இருவரும் சம அந்தஸ்துதான் என்றாலும் யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு. விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்ல. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஓவர்சீஸ்லயும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அஜித்துக்கு தமிழ்நாட்டுல மட்டும்தான் நிறைய ரசிகர்கள் இருக்காங்க.
அங்கே எல்லாம் வசூல் பாதிக்கும்போது முதல்நாள் வசூல் குறைவாகத்தான் இருக்கும். அஜித்தை மட்டம் தட்டுறதுக்காகவோ, விஜயைப் பில்டப் பண்றதுக்காகவோ இப்படி சொல்லவில்லை. உண்மை என்னன்னா வசூலிலும், வியாபாரத்திலும் அஜித்தை விட பல மடங்கு உயரத்தில் இருப்பவர்தான் விஜய். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான அஜித்தின் குட்பேட் அக்லி கடந்த 10 நாள்களாக இந்திய அளவில் 130 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. உலகளவில் 200 கோடியைத் தாண்டியுள்ளது.