தெறிக்க விடும் தாறுமாறு அப்டேட்... ரசிகர்களுக்கு சிறந்த விருந்தை படைக்கப் போகும் பீஸ்ட் படத்தின் கதை இதுதாங்க....!
பீஸ்ட் படத்தின் கதை எப்படி இருக்கும்? அதில் விஜய் என்ன கேரக்டரில் வருகிறார்? படத்தில் சண்டைக்காட்சிகள் எப்படி இருக்கும்? பாடல்கள் பட்டையைக் கிளப்புகிறது. படத்தின் அப்டேட்டுகளை ரசிகர்களும், இணையதளவாசிகளும் அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. அதுதான் பீஸ்ட் படத்தின் கதை. இந்த கதையை அமெரிக்காவில் உள்ள கேலக்சி திரையரங்கம் வெளியிட்டுள்ளது. அப்படி என்றால் நம்பத்தான் வேண்டும் என்கிறீர்களா? அது சரி. கதை என்ன என்று தான் பார்த்து விடுவோமே...!
நகரில் பரபரப்பான பகுதியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் அமைப்பின் தலைவரை விடுவிக்கக் கோரி இந்திய அரசுக்கு மிரட்டலும் விடுக்கிறார்கள். தீவிரவாதிகளை பிடிக்க அமைக்கப்படும் தனிப்பிரிவின் தலைவருக்கு தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் முன்னாள் ராணுவ அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவத்தினர் அவரது உதவியை நாடுகிறார்கள்.
இதனையடுத்து முன்னாள் வீரர் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக தீவிரவாதிகள் அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளிடமிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டு தீவிரவாதிகளை முன்னாள் ராணுவ வீரர் கொல்கிறார் என்பதே கதை.
படத்தின் கதையைப் பார்க்கப் போனால் அந்த முன்னாள் ராணுவ வீரர் தான் தளபதி விஜய்யாக இருக்கும். படத்தில் தீவிரவாதிகளுக்கும் விஜய்க்கும் இடையே நடக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் பட்டையைக் கிளப்பும் என்றே தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள். தளபதி விஜய் படம் உண்மையிலேயே நான் வெஜ் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்பது நிச்சயம்.