எப்பேர்ப்பட்ட டைரக்டரு அவரு? அவரையே விரட்டி விட்டாரா விக்ரம்? நிலைமையைப் பாருங்க..!

நடிகர் விஜயின் முதல் அவுட்சைடு பேனர் படத்தைத் தயாரித்தவர் பாலாஜி பிரபு. இவரது அப்பா எம்.பாஸ்கர் தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தைத் தந்த பைரவி படத்தை இயக்கியவர். இப்போது ஸ்ரீதரை மறந்து போன விக்ரம் குறித்து அதிரடியாக தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்ப்போமா...

அப்பாவும், ஸ்ரீதர் சாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் தயாரித்து இயக்கிய கடைசி படம் தந்து விட்டேன் என்னை. அந்தப் படம் தோல்வியடைந்ததால் ஸ்ரீதர் சாருக்கு கோடிக்கணக்கான ரூபாய் அவருக்கு நஷ்டமாகி விட்டது.

அப்போது அப்பாவிடம் ஸ்ரீதர் சார் சொன்னது இதுதான். பாஸ்கர் இப்போ 'இந்த உலகமே நன்றி கெட்டதா இருக்கு. என்னன்னு அப்பா கேட்டபோது ஸ்ரீதர் சார் சொன்னது அதிர்ச்சியை அளித்தது. விக்ரம் அந்தக் காலகட்டத்தில் வளர்ந்த ஹீரோவானார். தில், தூள் என்று கமர்ஷியல் ஹிட் அடித்து இருந்தார். அப்போது ஸ்ரீதர் சாருக்கு உடம்புக்கு முடியாமல் இருந்தாலும் கூட படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் கொஞ்சம் கூட குறையாமல் இருந்தது.

அதனால் விக்ரம் சார் வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கு ஸ்ரீதர் வந்திருக்கிறேன்னு சொல்லுங்க'ன்னு வாட்ச்மேன்கிட்ட சொல்லியிருக்கிறார். அவர் 'விக்ரம் சார் மேல தான் இருக்கிறார். நான் கூப்பிட்டுட்டு வர்ரேன்'னு போயிருக்கிறார்.


மேலே போனவர் 10 நிமிஷம் கழித்து வந்து 'சார் வந்து ஹைதராபாத்ல இருக்காராம். நான் தெரியாம சொல்லிட்டேன்'னு சொல்றார். ஸ்ரீதர் சார் 'அப்படியா ஓகே'ன்னு திரும்பினாராம். 'ஒரு காலகட்டத்துல ஸ்ரீதர் சார் டைரக்ஷன்ல எப்படியாவது நாம நடிச்சிட மாட்டோமா'ன்னு காத்துக்கிட்டு இருந்த ஒரு நடிகர் இப்படி சொன்னதே தப்பு. ஆனா சினிமா பத்தின அவலங்களும், உண்மைகளும் நிறைய பேருக்குத் தெரியறதே இல்லை.

அப்போ அந்த வலியை அப்பாக்கிட்ட வந்து ஷேர் பண்ணியிருக்காரு. அதன்பிறகு அவர் உடல்நலம் குன்றி இறந்து போனார். அந்த இறப்புக்குக் கூட விக்ரம் போகவில்லை. அவரை அறிமுகப்படுத்தியதே ஸ்ரீதர் சார் தான். ஆனாலும் போகவில்லை. அப்போது சினிமா இன்டஸ்ட்ரியே அவரது இறப்புக்குப் போனது. அதுக்கு அப்புறமும் எதுவும் கேட்கவில்லை. துக்கமும் விசாரிக்கவில்லை. இது நடந்த உண்மை சம்பவம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it