ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஒரே நபர் என்றால் அது வில்லன் விநாயகன் தான். மோகன்லால் படத்தில் அறிமுகமான மலையாள நடிகர் விநாயகன் தமிழில் விஷாலின் திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்திருப்பார்.
நடிகர் தனுஷ், பார்வதி நடித்த மரியான் படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டிய விநாயகன் அதன் பிறகு தமிழ் படங்களில் தலையே காட்டவில்லை. பல வருடங்கள் கழித்து ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மிரட்டலான வில்லனாக் ஜெயிலர் படத்தில் விநாயகனை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
இதையும் படிங்க: அடிக்க வறேன்னு சொன்னீங்க ஆளையே காணோம்!.. ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுக்கும் புளூசட்டமாறன்..
ரஜினிக்கே விபூதி அடித்த விநாயகன்:
பீஸ்ட் படத்தில் மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொண்டு வந்த நெல்சன் ஜெயிலர் படத்திலும் மலையாள வில்லன் நடிகரை நடிக்க வைத்து இருக்கிறார்.
விநாயகத்துக்கு முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி தான் என பலரும் கூறுகின்றனர். ஆனால், தளபதி தேவாவை இப்படியொரு வில்லத்தனமான ரோலில் ரஜினிக்கு எதிராக நடிக்க வைத்திருந்தால் நிஜமாவே நல்லா இருக்காது என்றும் விநாயகன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து மிரட்டியுள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!.. வசூல் வேட்டையில் ஜெயிலர்!..
10 பெண்களுடன் உல்லாசம்:
அதே சமயத்தில் சில மாதங்களுக்கு முன்னதாக மீடூ சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமானவர் தான் இந்த விநாயகன் என்கிற பரபரப்பு தகவல்களும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தன் மீதான மீடூ குற்றச்சாட்டுக்கு அமைதியாக எல்லாம் இல்லாமல், நான் எந்த பெண்ணுடனும் அவர்களின் அனுமதியில்லாமல் உறவு வைத்துக் கொண்டதில்லை என்றும் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருக்கிறேன் என தனது காம லீலைகளை வெளிப்படையாக பேசி பரபரப்பை பற்ற வைத்திருந்தார்.
இதையும் படிங்க: அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்புதான்! – ஜெயிலர் பார்த்திவிட்டு பொங்கி எழுந்த வனிதா..
முதலமைச்சர் பற்றியே மோசமாக:
மறைந்த முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி குறித்தும் அவதூறாக பேசி சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவும் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்கச் செய்தது.
ஆனால், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதில் பட்டதை தைரியமாக ஒளிவு மறைவின்றி பேசும் தில் கொண்ட நபராக வலம் வரும் விநாயகன் ஜெயிலர் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…