டேய் அவரு சூப்பர்ஸ்டாரு நான் வெறும் கமல்ஹாசனா?.. ராதாரவியிடம் காண்டான கமல்ஹாசன்!..

by Saranya M |
டேய் அவரு சூப்பர்ஸ்டாரு நான் வெறும் கமல்ஹாசனா?.. ராதாரவியிடம் காண்டான கமல்ஹாசன்!..
X

ஒருமுறை ராதாரவி பேட்டி ஒன்றில் பேசும் போது கமல்ஹாசன் எந்தளவுக்கு தனது பட்டத்தின் மீது குறியாக இருந்தார் என்பது குறித்து வெளிப்படையாக பேசிய த்ரோபேக் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இடையே சூப்பர்ஸ்டார் சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிளான ஹுகும் பாடலில் நான் தான் சூப்பர்ஸ்டாருடா என்றே பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பட்டத்துக்காக ரொம்பவே பயப்படுகிறார். எங்கே விஜய் உள்ளிட்ட இளம் நடிகர் தனது பட்டத்தை பறித்துக் கொள்வார்களோ என பயந்தே பட்டத்தை பறிக்க நூறு பேரு என்கிற வசனத்திற்கு ரஜினி அனுமதிக் கொடுத்துள்ளார் என பல விமர்சகர்களும் நெட்டிசன்களும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் பட்டத்துக்கு எப்படி பயந்தார் என ராதாரவி பேசிய பழைய பேட்டி ஒன்றையே பதிவிட்டு கமல்ஹாசனை கலாய்த்து வருகின்றனர்.

பட்டம் முக்கியம் அமைச்சரே:

ஒரே பெயரில் பல நடிகர்கள் வரக் கூடும் என்பதால் நடிகர்கள் ஆளுக்கொரு பட்டத்தை வைத்துக் கொண்டு அந்த காலத்தில் இருந்தே சுற்றி வருகின்றனர். எம்ஜிஆர் தனக்கு புரட்சித் தலைவர், மக்கள் திலகம் உள்ளிட்ட பட்டங்களை வைத்திருந்தார். சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் சூட்டப்பட்டது.

ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கமல்ஹாசனுக்கு உலக நாயகன் பட்டமும் விஜயகாந்துக்கு புரட்சிக் கலைஞர் பட்டமும் சூட்டப்பட்டன. அதன் பின்னர் விஜய்க்கு இளைய தளபதி, அஜித்துக்கு தல போன்ற பட்டங்கள் உருவாகின. தல பட்டத்தை தோனிக்கு ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சூழலில் தனக்கு பட்டமே தேவையில்லை என அஜித் அதிரடியாக அறிவித்தார்.

ரஜினிகாந்த் vs விஜய்:

நடிகர் விஜய் இளைய தளபதியில் இருந்து தளபதியாக அப்கிரேட் ஆன நிலையில், அடுத்து சூப்பர்ஸ்டார் ஆக அப்கிரேட் ஆகி விட்டதாக சரத்குமார் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சரத்குமாரை தொடர்ந்து பத்திரிகையாளர் பிஸ்மி உள்ளிட்ட பலரும் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பேச ஆரம்பித்த நிலையில், விஜய் மெளனமாக இருந்ததை பார்த்து கடுப்பாகித் தான் ஜெயிலர் படத்தில் இப்படியொரு பாட்டை போட்டு ரஜினி பதிலடி கொடுத்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசி வருகின்றனர்.

ராதா ரவியுடன் பட்டத்துக்காக சண்டை போட்ட கமல்:

இந்நிலையில், ரஜினி, விஜய்யை எல்லாம் விடுங்க பட்டத்துக்காக கமல்ஹாசன் ராதா ரவியுடனே சண்டை போட்ட சம்பவத்தை பாருங்க என ராதா ரவி பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசும் போது ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தும், மற்ற அனைவருக்கும் அடைமொழிகளை சொல்லி பேசினார், கடைசியாக என் பெயரை வெறும் ராதாரவி என்று சொல்லி கடந்தார்.

காண்டான கமல்:

நான் சும்மா விடுவேனா, நன்றியுரை நான் தான் வாசிக்கணும்.. நானும் ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார், விஜயகாந்துக்கு புரட்சிக் கலைஞர் என அனைவருக்கும் அடைமொழி கொடுத்து பேசிட்டு கடைசியாக கமல்ஹாசன் என சொல்லிவிட்டேன்.

இதை கேட்டதும் கடுப்பான கமல், மேடையில் இருந்து பின்புறம் இறங்கி செல்லும் போது, என் கையை புடிச்சிட்டான்.. அப்போலாம் நாங்க வாடா போடா நண்பர்கள் தான். ரஜினி மட்டும் சூப்பர்ஸ்டாரு.. நான் வெறும் கமல்ஹாசனா? என்றே கேட்டார். அதன் பின்னர் தான் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது என்று ராதா ரவி பேசியதை பார்த்த ரசிகர்கள் பட்டத்துக்கு பின்னாடி நடிகர்களின் ஈகோ இந்தளவுக்கு இருக்கிறதா? அதனால் தான் அதிரடியாக ஜெயிலர் படத்தில் இப்படியொரு பாடல் வந்துள்ளதா என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Next Story