குடிச்சிட்டு எல்லாரும் என்ன பண்ணுவாங்க? மணிவண்ணன் செஞ்சதுதான் ஹைலைட்- வாகை சந்திரசேகர் கூறிய சீக்ரெட்
தமிழ் சினிமாவில் மணிவண்ணன் என்று சொன்னாலே கோயம்புத்தூர் பாஷையில் நக்கலும் நையாண்டியுமாக அரசியலை பற்றி புட்டு புட்டு வைப்பதுதான் நியாபகத்திற்கு வரும். யாரை பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை அப்படியே சினிமாவில் வசனமாக சிதறடிப்பார்.
மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார் மணிவண்ணன். அதற்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு வழி நடத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க : அரைச்ச மாவையே அரைக்கிறதுக்கு இத்தனை கோடியா? வெளிநாட்டில் மட்டையாகி கிடக்கும் அனிருத்
ஆரம்பத்தில் சினிமா என்றாலே வெறும் போர் என்று நினைத்திருந்த நேரத்தில் 16 வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற படங்கள் வெளிவர தொடங்கியது அவருக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தியது. அவர் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கிய நேரத்தில் இந்தப் படங்கள் மணிவண்ணனுக்கு தைரியத்தை கொடுத்தது.
பாரதிராஜாவுடன் உதவி இயக்குனராக சேர்ந்த மணிவண்ணன் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஒவியம் போன்ற படங்களுக்கு இவர்தான் வசனம் எழுதினார். தனது முதல் அறிமுகத்தை அற்புதமாக தொடங்கினார் மணிவண்ணன்.
கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் மணிவண்ணனும் தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் இயக்குனர் அறியப்பட்டார். அதை தொடர்ந்து பல வெற்றிகளை குவித்தார். இந்த நிலையில் அவரது நண்பரும் நடிகருமான வாகை சந்திரசேகர் மணிவண்ணனை பற்றி சில விஷயங்களை கூறினார்.
இதையும் படிங்க : தான் செஞ்ச வினை தனக்கே திரும்பும்னு நினைச்சிருக்கவே மாட்டாரு! ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு வந்த நெருக்கடி
அதாவது மணிவண்ணன் மாண்புள்ளவன், திறமையானவன், வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்தவன். திடீரென மதுப் பழக்கத்திற்கு ஆளானார். சாதாரணமாக குடி என்பது ஒரு மனிதனின் கஷ்டங்களை மறப்பதற்கும் மனம் நிம்மதியடைவதற்கும் தான் உதவும் என்பார்கள். ஆனால் மணிவண்ணன் மது அருந்திவிட்டு கார்ல் மார்க்ஸ் போன்றோர்களின் நாவல்களை படிப்பாராம்.
பெரிய பெரிய நாவல்கல், புதினங்கள் இவற்றை மிக உன்னிப்பாக படித்து தெரிந்து கொள்வாராம். இதுவே அவரின் உடல் நிலையை பாதித்ததற்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம் என வாகை சந்திரசேகர் கூறினார்.