அட்டர் பிளாப்.! இப்போ அடிதூள் ஹிட்.! வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க.! லிஸ்ட் ரெம்ப பெருசு.!
தமிழ் சினிமாவில் எப்போதும் ஓர் சாபக்கேடு உண்டு ஒரு தரமான திரைப்படம் பத்துவருடதிற்கு முன்பே ரிலீசாகி இருந்திருக்கும். அப்போது அந்த பாடம் கவனிக்க பட்டிருக்காது, படமும் பிளாப் ஆகிவிடும் ஆனால், தற்போது அந்த படத்தை ஆகோ ஓகோ என புகழ்வார்கள். அதில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் செல்வராகவன் முதல் கமல்ஹாசன் , மணிரத்னம் வரையில் பலரும் சிக்கியுள்ளனர்.
கமல் கதை வசனம் எழுதிய பட படங்கள் இந்த லிஸ்டில் வந்துவிடும். அதில் முதலில் விக்ரம். இந்த படத்தின் தீம் மியூசிக், கதை, காட்சியமைப்பு என ஹாலிவுட் தரத்தில் மிரட்டியிருப்பார் கமல் ஆனால், எனோ படம் பிளாப்,
அடுத்து குணா. இதுவும் அப்படிதான், கமலின் நடிப்பு , கதைக்களம் என பாராட்டுகளை பெற்ற திரைப்படம். அழகான கமலை அழுக்காக பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. மேலும், அதே நாளில் ரஜினி - மணிரத்னத்தின் தளபதியின் மெகா ஹிட் குணா பிளாப் ஆக பெரிய காரணமாக அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர் - கருணாநிதி எனும் இரு பெரும் ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை அவர்கள் காலத்திலேயே இருவர் எனும் சினிமாவாக எடுத்த மணிரத்னத்துக்கு ஒரு பெரிய அசாத்திய தைரியமே இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை பார்த்து ஆவண படம் போல இருக்கிறது என கூறத்தான் அப்போதைய ஆடியன்ஸுக்கு தெரிந்து உள்ளது போல.
ஆயுத எழுத்து , இந்த படம் இப்போது வெளியாகி இருந்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட். இந்த படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் காரணமாகவே இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்திருப்பர். ஆனால், எனோ அப்போது இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை.
அடுத்து, கமலின் அன்பே சிவம். இது பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. படம் வெளியான போது போதிய வரவேற்பு இல்லை. தற்போது இது அற்புதமான காவியமாக பார்க்கப்படுகிறது. ஆளவந்தானுக்கும் இதே கதைக்களன்.
இதில் புதுப்பேட்டையை சேர்க்காமல் விட்டால் தெய்வ குத்தமாகிவிடும். செல்வராகவன் - தனுஷ் எனும் கலைஞர்களை ஜாம்பவான்களாக தமிழ் சினிமா உணர்ந்த தருணம் அது. ஒரு பக்கா கேங்ஸ்டர் படம் எந்தவித சமரசமும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி ரத்தமும் சதையுமாக எடுத்து தற்போது வரையில் பலரது பேவரைட் திரைப்படமாக இருக்கிறது இந்த படம். படத்தில் வன்முறை காட்சிகள் அளவுக்கு அதிகமாக இருந்ததே படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் - அஜித்துக்கு போட்ட அதே ஸ்கெட்ச்.! சிக்குவாரா சூர்யா.?!
மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன். இப்படி ஒரு கதை இந்திய சினிமாவில் யாரும் யோசித்ததுகூட கிடையாது. இன்னும் சோழ வம்சம் வாழ்ந்து வருகிறது. அவர்களை தற்காலத்து மக்கள் தேடி செல்கிறார்கள். செல்லும் வழியில் ஏற்படும் தடைகள் என படம் அவ்வளவு அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் படத்தின் ரிசல்ட்டுக்கு கைகொடுக்கவில்லை.
இது போக, அஞ்சலி, ரிதம், கன்னத்தில் முத்தமிட்டால் என பல படங்கள் இந்த லிஸ்டில் இருக்கிறது.