எஸ்.பி.பி இது இல்லாம பாடவே வரமாட்டாராம்! இசையமைப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல்
இவருடன் செல்லமாக பழகியவர்கள் இவரை பாலு என்று தான் அழைப்பார்கள். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் பெரும் புகழைப் பெற்றார் எஸ்.பி பாலசுப்ரமணியம். தெலுங்கு தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கும் பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார். இவரை பாடும் நிலா என்று தான் அழைக்கிறார்கள்.
1966 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய பாலசுப்பிரமணியம் முதன்முதலாக சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் தான் பாடினார். ஆனால் அந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற பாடல் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த ஒரு பாடல் தான் அவரின் புகழை எங்கேயோ கொண்டு சென்றது. தொடர்ந்து இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ் சமீபத்தில் அனிருத் ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிய பெருமைக்குரிய பாடகராக எஸ்பி பாலசுப்ரமணியம் திகழ்ந்தார்.
இதையும் படிங்க : தங்கவேல் தலையில் இருக்கும் தொப்பியின் ரகசியம் இதுதான்!. இவ்வளவு நடந்திருக்கா?!…
இவர்களைத் தவிர புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு எஸ்பிபிக்கு கிடைத்தது. இருந்தாலும் தான் ஒரு இசைக் கலைஞன் என்ற கர்வத்தை கொள்ளாமல் சினிமாவில் சாதிக்க வரவேண்டும் என்ற எண்ணத்தில் வரும் அனைத்து புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பணியாற்றினார்.அந்த வகையில் பிரபல இசை அமைப்பாளர் ஆன நிவாஸ் கே பிரசன்னா இவருடன் இணைந்து கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தில் எஸ்பிபி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
அந்த சமயத்தில் எஸ்பிபியின் சில செயல்களை பார்த்து நிவாஸ் ஆச்சரியப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறினார். அதாவது எஸ்பிபி பாட வரும் போது எப்போதுமே மூன்று நேரத்தில் பேனாக்களை வைத்திருப்பாராம். எங்கு எப்படி பாட வேண்டும் எந்த மாதிரி இறக்க வேண்டும் என்பதை அந்த கலர் பேனாக்களை கொண்டு அவருக்கு ஏற்ற வகையில் குறித்துக் கொள்வாராம். அது மட்டுமில்லாமல் அந்தப் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்?ஹீரோ, ஹீரோயின்கள் யார் என்பதையும் அறிந்து கொண்டு தான் பாடுவாராம்.
இதையும் படிங்க : கட்டிபிடிக்கும் போது தெரியாம பட்டிருச்சு! நடிகையால் டென்ஷனான ஃபகத் – மாமன்னன் படத்தில் நடந்த ருசிகர சம்பவம்
கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தில் ஏன்டா இப்படி என்ற ஒரு பாடலை பாடியது எஸ்பிபி தான். இது இளைஞர்களுக்காக அமைக்கப்பட்ட பாடல். இந்த பாடலை பாடும்போது இசை அமைப்பாளர் நிவாஸ் எஸ்பிபி இடம்" சார் இது யூத்களுக்கான பாடல். அதனால் அவர்களை மனதில் வைத்துக்கொண்டு கொஞ்சம் பாடுங்கள் "என்று கூறினாராம் .இதை கேட்டதும் எஸ்பிபிக்கு கோபம் வந்து விட்டதாம். நானே ஒரு யூத் தான். இந்த மாதிரி என்னிடம் பேசாதே என செல்லமாக கோபித்துக் கொண்டாராம்.