Categories: Cinema News latest news

லோகேஷ் கையிலெடுக்கும் ரோலக்ஸ்!.. வெறித்தனமா களமிறங்கும் சூர்யா!.. பரபர அப்டேட்!…

லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் அடுத்து யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்து வருகிறது. ஆனால் கிட்டத்தட்ட ரஜினியின் 171 வது படத்தை தான் அடுத்ததாக லோகேஷ் இயக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகின.

ஆனால் ரஜினியின் படத்திற்கு முன்பாக லோகேஷ் கைதி 2 படத்தை எடுக்கப் போகிறார் என்றும் கூறினார்கள். ஆனால் இரண்டும் இல்லாமல் சூர்யாவை வைத்து தான் லோகேஷ் படம் பண்ணப் போகிறாராம். ஆனால் அது இரும்புக்கை மாயாவியா இல்லை ரோலக்சா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இதையும் படிங்க : விஜய், அஜித்தை ஓரங்கட்டி ரியல் ஸ்டாராக நிற்கும் ஷாரூக்கான்! ‘ஜவான்’ படத்தால் நிகழப்போகும் அதிசயம்

சூர்யாவை வைத்து ரோலக்ஸ் படத்தை தான் லோகேஷ் இயக்கப் போகிறாராம். அதுவும் சூர்யாவின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த படம் தயாராக போகிறது என்ற ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. கைதி படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென சூரியா ரோலக்ஸ் படத்தை எடுக்க வேண்டும் என விரும்ப அண்ணனுக்காக கார்த்தி விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதுவும் எஸ் ஆர் பிரபுவிடம் இந்த பிரச்சனை போக ஏற்கனவே கைதி 2 படத்தை அவர்தான் தயாரிக்க போகிறார். இந்தப் பக்கம் சூர்யாவின் பேச்சையும் தட்ட முடியாமல் ரோலக்ஸ் படத்தையே எடுக்கலாம் என முடிவு செய்து விட்டாராம் . இந்த படத்தையும் எஸ் ஆர் பிரபு தான் தயாரிக்கப் போகிறாராம்.

இதையும் படிங்க: ரஜினி கெத்துதான்!.. ஆனா விஜய் செம மாஸ்!.. களத்தில் இறங்கி கொளுத்திப்போட்ட ராமராஜன்!…

ஒருவேளை லோகேஷின் அடுத்த படம் ரோலக்ஸ் என்றால் கைதி 2 படம் வெளிவராது என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஏனெனில் எஸ் ஆர் பிரபு லோகேஷிடம் தொடர்ந்து மூன்று படங்களுக்கு அக்ரீமெண்ட் போட்டு இருந்தாராம். மாநகரம், கைதி, மூன்றாவது படமாக ரோலக்ஸ் அமைந்தால் கைதி படம் வெளிவர வாய்ப்பு இருக்காது என கூறுகிறார்கள்.

ஆனால் அதையும் மீறி கைதி 2 படத்தை எடுக்க வேண்டும் என எஸ் ஆர் பிரபு நினைத்தால் அந்த நேரத்தில் லோகேஷுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தான் படத்தை எடுக்க வேண்டும் என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

Published by
Rohini