கோலிவுட்டின் கியூட் ஜானுவா? ஜெஸ்ஸியா? கண்டுப்பிடிக்கலாம் வாங்க...

by Akhilan |
கோலிவுட்டின் கியூட் ஜானுவா? ஜெஸ்ஸியா? கண்டுப்பிடிக்கலாம் வாங்க...
X

கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த நாயகி கதாபாத்திரங்கள் எனக் கேட்டால் கண்டிப்பாக அதில் ஜெஸ்ஸியும், ஜானுவும் இடம் பிடித்திருப்பார்கள். இரண்டையுமே நடித்தது த்ரிஷா தான். இருந்தும் இருவரும் ரசிகர்களை வேறு மாதிரி கவர்ந்துள்ளனர் என்பதே உண்மை. இதில் ஜானுவுக்கும், ஜெஸ்ஸிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று தான் இப்போ பார்க்க போறோம்.

ஜெஸ்ஸிக்கு சினிமாவிற்கும் சம்மந்தமே இல்லை. அவள் கேட்கும் பாடல்கள் கூட சர்ச்சில் ஒலிப்பவை தான். தன் மொத்த வாழ்க்கையில் ஜெஸ்ஸி அதிகம் பார்த்தது 5 படங்கள் தான். இவளுக்கு நேர்மாறானவள் ஜானு. அவளுக்கு சினிமா பாடல்கள் என்றால் உயிர். ஜானுவை மேடையேற்றி பிடித்த சினிமா பாடல்களை அவளை பாட வைத்து ரசிப்பதே அவர் நண்பர்களின் வேலை.

உடையலங்காரத்தில் ஜானு மற்றும் ஜெஸ்ஸி இருவரும் ஒரே ரகம் தான். இதில் ஜெஸ்ஸி பெரிதாக புடவையை விரும்புவள். ஜானுவிற்கு டிசைன் இல்லாத சாதாரண சல்வாரே போதும். தன்னை விட சிறு வயது கார்த்திக்கிடம் ஜெஸ்ஸி எப்போதுமே ஒரு இடைவேளையுடன் தான் பழகுவாள். ஆனால், தன் வயது ராமிடம் ஜானு எப்போதுமே ஒரு உரிமை எடுத்துக் கொள்வாள். அது பல வருடம் கழித்து வந்து ராமின் உடை, முடியில் அவள் செய்யும் திருத்தமே சொல்லி விடும்.

ஒருமுறை ஜெஸ்ஸி மற்றும் கார்த்தி இருவரும் ரயில் பயணம் செய்வார்கள். அதில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்படும். ஏன் கார்த்தி ஜெஸ்ஸியை கிஸ் கூட செய்திருப்பார். அதன்பின்னரும், கூட ஜெஸ்ஸி தனது ஒழுக்கம் குறித்து மட்டுமே யோசிப்பார். கார்த்திக்கும் காதலை பெரிதாக யோசிக்கமாட்டார். ஆனால், ஜானுவோ ராமிடம் நேருக்கெதிராக நீ இன்னும் வெர்ஜினா என நேரடியாக கேட்பார். அதுமட்டுமல்லாமல், அவரை புகழும் போது தான் நினைப்பதே அப்படியே கூறுவார்.

காதலிக்கும் போதும், திருமணத்துக்கும் பிறகும் ராமிற்காக விட்டு கொடுத்து போகிறாள் ஜானு. ஆனால், ஜெஸ்ஸி கார்த்திக்கை எப்போதுமே காதலுக்கு ஓகே சொல்லாமல் ஒரு திகிலுடன் வைத்திருக்கிறாள். ஒரு சண்டைக்கே எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறி அதில் உறுதியாகவும் இருந்து விடுகிறாள்.

இதையும் படிங்க: மீண்டும் ரசிகர்களை சந்திக்க வரும் ராம் ஜானு…. உருவாகிறது 96 படத்தின் இரண்டாம் பாகம்..!

இருவருமே தங்களது காதலனை விடுத்து இன்னொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், இது ஜானு கடைசி நிமிடம் வரை ராமிற்கு காத்திருப்பது தான் ஹைலைட். ஜெஸ்ஸி எப்போதுமே அமைதியானவள். ஒருமுறை தான் வாய்ப்பு அதை தவறவிட்டால் அவ்வளவு தான். ஆனால், ஜானு அப்படி இல்லை. தன் காதலுக்காக எத்தனை தூரம் வேண்டும் என்றாலும் இறங்கி போகிறவள். ஜெஸ்ஸிக்கும், ஜானுவிற்கும் பல வேற்றுமைகள் இருந்தாலும், இருவரும் ரசிகர்களை கவர்ந்த தேவதைகள் என்பதே உண்மை.

Next Story