பிரதீப் ரங்கநாதன், சிவகார்த்திகேயன் யார் அசுர வளர்ச்சி? அட அவரே சொல்லிட்டாரே!

sk pradeep ranganathan
2019ல் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக வந்து தமிழ்த்திரை உலகில் அடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ்டுடே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த இரு படங்களுமே மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வகையில் இயக்குனராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இவர் கடைசியாக நடித்த டிராகன் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தனது அசாத்திய திறமை மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் சிவகார்த்திகேயன். 2011ல் மெரீனா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்தார். மனம் கொத்திப் பறவையில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. தொடர்ந்து குழந்தைகளையும் கவரும் விதத்தில் டான், டாக்டர், அயலான் படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த அமரன் படம் இவரை வேற லெவலுக்குக் கொண்டு சென்றது. இப்போது மதராசி, பராசக்தி என இரு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் பராசக்தி படம் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்துடன் அடுத்த ஆண்டு மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் இந்த ரெண்டு பேருல யாருடைய வளர்ச்சி வேகமானதுன்னு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.
2019ல் தான் தமிழ்சினிமா உலகிலே கோமாளி என்ற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார் பிரதீப் ரங்கநாதன். அதை வைத்துப் பார்க்கும்போது அவரது வளர்ச்சி அசுர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனைத் தாண்டிய வளர்ச்சி என்று கூட அதைச் சொல்லலாம். அதே நேரம் நடிகர் என்ற அந்தஸ்தில் சிவகார்த்திகேயனையும் பிரதீப் ரங்கநாதனையும் ஒரே தராசு தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்பதும் உண்மை என்று தெரிவித்துள்ளார்.