வடிவேலு, விவேக் காமெடியில யாரு பெஸ்ட்னு தெரியுமா? இயக்குனர் சொல்றதைக் கேளுங்க...
காமெடியில் திறமையானவர்கள் தான். அவரவர்களின் திறமைக்கேற்ப தனி பாணியை உருவாக்கிக் கொண்டு படங்களில் காமெடி செய்து வந்தனர். இவர்களில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் விவேக். அவர் நம்மிடையே இப்போது இல்லை என்றாலும் இன்றும் அவரது காமெடி பேசப்படுகிறது.
காமெடியுடன் சமுதாய சிந்தனைகளையும் கலந்து அடித்தவர் அவர். வடிவேலுவைப் பொருத்தவரை பாடி லாங்குவேஜ் தான் அவரது தனித்தன்மை. இருவரது காமெடிகளையுமே ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் வின்சென்ட் செல்வா இவர்களின் காமெடியைப் பற்றி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பேட்டியில் ஒரு சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். என்னன்னு பார்க்கலாமா...
இதையும் படிங்க... காலையில போய் பார்த்தா அழுதுக்கிட்டு இருப்பாரு!.. ரஜினி பற்றி ஷாக்கிங் தகவல் சொன்ன இயக்குனர்…
வின்சென்ட் செல்வா இயக்குனராக அறிமுகமானது விஜய் படத்தில் தான். பிரியமுடன் தான் அந்தப் படம். 1996ல் கமர்ஷியல் ஹிட் அடித்தது. விஜய் ஆன்ட்டி ஹீரோவா வித்தியாசமான ரோலில் நடித்த படம் இதுதான்.
தொடர்ந்து 2002ல் விஜய் நடித்த யூத் படத்தை இயக்கினார். இது இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சிம்ரனுடன் இணைந்து 'ஆல்தோட்ட பூபதி' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கியிருப்பார் விஜய். அப்போது இது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
அந்த வகையில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவின் படங்களில் வடிவேலு, விவேக் என இருவருமே நடித்துள்ளனர். அவர்களைப் பற்றி வின்சென்ட் செல்வா என்ன தகவல்களைச் சொல்கிறார்னு பார்க்கலாமா...
வடிவேலுவைப் பொருத்தவரை ஸ்பாட்லயே காமெடி பண்ணுவாரு. ஆனா நல்லா ஒர்க் அவுட் ஆகிடும். வடிவேலுவுக்கு ஸ்பாட்லயே ரிசல்ட் தெரிந்து விடும். தியேட்டர்ல பார்க்குற காமெடியோட ரிசல்ட்ட அங்கேயே பார்க்கலாம்.
ஆனா விவேக் அப்படியில்ல. ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஆனா கொஞ்சம் பிடிவாதமானவர். அவருக்குன்னு ஒரு பாணி வச்சிருப்பாரு. ஒர்க் அவுட் பண்ணிட்டு வந்து காமெடி பண்ணுவாரு. அவரோட காமெடி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். பிரசன்னகுமார கூப்பிட்டு வச்சி விவேக் நல்லா ரிகர்சல் பார்த்துடுவாரு.
இதையும் படிங்க... விஜய் பட வீடியோ வரும்போது என் போட்டோ வரணும்!.. அஜித்தை பங்கம் செய்த பிரபலம்!..
யூத் படத்துல காமெடி நல்லா இருந்துச்சுன்னு நிறைய பேரு சொன்னாங்க. வடிவேலு எப்பவும் ஸ்பாட்ல போற போக்குல காமெடியை அடிச்சி விடுவாரு. விவேக் கொஞ்சம் இறங்கி ஒர்க் அவுட் பண்ணிட்டு வந்து காமெடி பண்ணுவாரு. அது கொஞ்சம் கிளாஸா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.